பணம் தரும் ஏ.டி.எம்; பாட்டு பாடும் ஸ்பீக்கர்; சொன்னதைச் செய்யும் முதியவர் பைக்கின் வைரல் வீடியோ

ஆயிரக்கணக்கான லைக்ஸுகளை அள்ளி வருகிறது இந்த வீடியோ..!

பணம் தரும் ஏ.டி.எம்; பாட்டு பாடும் ஸ்பீக்கர்; சொன்னதைச் செய்யும் முதியவர் பைக்கின் வைரல் வீடியோ
சொன்னதை செய்யும் பைக்
  • News18
  • Last Updated: October 16, 2019, 6:52 PM IST
  • Share this:
பணம் கேட்டால் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரம் மற்றும் இசை முழங்கும் ஸ்பீக்கர்கள், சொன்னதை செய்யும் திறன் என பைக் ஒன்று இணையத்தில் வைரலாக உலா வந்துக்கொண்டிருக்கிறது.

சாச்சா என்ற முதியவர் வைத்திருக்கும் புல்லட் வித்யாசமாக இருப்பதைக் கண்டு அவரிடம் பைக் குறித்த சிறப்புகள் குறித்து ஒருவர் கேட்கிறார். அதில் அவர் பைக்கில் ஏடிஎம் இயந்திரம் பொருத்தியுள்ளார். அதனிடம் சென்று ஐந்து ரூபாய் கொடு என்று கேட்க அடுத்த நொடியில் ஐந்து ரூபாயை கொடுக்கிறது அந்த மிஷின். அவரின் கை அசைவுக்கு பொருத்தியிருக்கும் ஸ்பீக்கர்கள் பாடலை ஒலிக்கின்றன. பின் அவர் புல்லட் ஸ்டாண்டுகளை போடச் சொல்லி கட்டளையிட தானாக ஸ்டாண்டைப் போடுகிறது. அதேபோல் புல்லட்டை இயக்கச் சொல்கிறார் இயக்குகிறது. இப்படி அந்த முதியவரின் கட்டளைகளுக்கெல்லாம் இணங்குகிறது அந்த புல்லட்.

ஆனால் அவற்றை எப்படி இயக்க வைத்திருக்கிறார். அந்த முதியவருக்கு இத்தனை திறமை எப்படி தோன்றியது என்பன போன்ற எந்த தகவல்களும் இல்லை.

இத்தனை சிறப்புகளைக் கண்டு வியந்த அந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Also see:

First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading