Home /News /trend /

சில்லுனு மழை.. ஸ்கூட்டரில் ஜாலி ரைடு - விராட் கோலி அனுஷ்கா வைரல் வீடியோ..!

சில்லுனு மழை.. ஸ்கூட்டரில் ஜாலி ரைடு - விராட் கோலி அனுஷ்கா வைரல் வீடியோ..!

விராட் கோலி - அனுஷ்கா

விராட் கோலி - அனுஷ்கா

Virat - Anushka Viral Video | கோலியும் அனுஷ்காவும் தங்கள் சொகுசு கார்களை விட்டு ஸ்கூட்டர் ரைடை தேர்வு செய்ததற்கு அன்று மும்பையில் நிலவிய பருவமழை கிளைமேட் முக்கிய காரணமாக இருக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் அவரது மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் சோஷியல் மீடியாக்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸை கொண்டுள்ளனர். தங்கள் ஃபாலோயர்களுக்கு கப்புல் கோல்ஸ் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் உற்சாகமாக இருக்க தங்கள் நேரத்தை ஒன்றாக செலவிடுகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து சூப்பரான மழை கிளைமேட்டில் மும்பை தெருக்களில் ஸ்கூட்டர் சவாரி செய்தது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி இருக்கிறது. விராட் மற்றும் அனுஷ்கா ஆகிய இருவரும் சமீபத்தில் ஒரு ப்ராஜக்ட் ஷூட்டிங்கிற்காக மும்பையில் உள்ள Madh Island-ற்கு சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் திரும்பி வரும் வழியில் கருப்பு நிற ஸ்கூட்டரில் சவாரி செய்த வீடியோ தான் தற்போது வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவில் விராட் கோலி பச்சை நிற சட்டை மற்றும் கருப்பு பேண்ட்டில் காணப்படுகிறார், அதே போல அனுஷ்கா ஷர்மா கருப்பு டீ ஷர்ட் மற்றும் பேண்ட்டில் காணப்படுகிறார். ஸ்கூட்டரின் முன்னால் அமர்ந்து விராட் ஓட்ட, பின் சீட்டில் அமர்ந்தபடி செல்கிறார் அனுஷ்கா ஷர்மா. எனினும் ரோட்டில் செல்லும் போது ரசிகர்களின் கண்களில் சிக்காமல் இருக்க இருவருமே கருப்பு ஹெல்மெட் அணிந்திருப்பதால் முகம் தெரியவில்லை. இந்த ரைடின் போது இருவருமே மேட்சிங் மேட்சிங் என்பது போல வெள்ளை கலர் ஸ்னீக்கர்களை அணிந்திருந்தனர்.

கோலியும் அனுஷ்காவும் தங்கள் சொகுசு கார்களை விட்டு ஸ்கூட்டர் ரைடை தேர்வு செய்ததற்கு அன்று மும்பையில் நிலவிய பருவமழை கிளைமேட் முக்கிய காரணமாக இருக்கலாம்.



 




View this post on Instagram





 

A post shared by Viral Bhayani (@viralbhayani)






சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஸ்கூட்டர் ரைடுக்கு முன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த இருவரும் அதே உடையில் இருப்பதை பார்க்க முடிகிறது. இருவரும் Suzuki Access 125-ல் சவாரி செய்வதை வீடியோவில் காணலாம். விராட் கோலி உள்நாட்டு பைக் தயாரிப்பாளரான ஹீரோவின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Also Read : ஸ்கூட்டருடன் அந்தரத்தில் தொங்கிய உரிமையாளர்... அதிரடி காட்டிய போலீஸ்! வைரலாகும் வீடியோ..

கோலியும் அனுஷ்காவும் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் காதலித்த பிறகு டிசம்பர் 11, 2017 அன்று திருமணம் செய்து கொண்டனர். மேலும் ஜனவரி 2022-ல் இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே மழை பெய்து ஓய்ந்திருந்த ஈரமான மற்றும் குண்டும் குழியுமான சாலையில் இருவரும் ஜாலியாக ஸ்கூட்டரில் ரைடு சென்றதை கண்ட பல நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செக்ஷனில் பல ஜாலியான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து உள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Anushka Sharma, Trending, Viral Video, Virat Kohli

அடுத்த செய்தி