ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஒரு மூட்டை 10 ரூபாய் காயின்ஸ்! பைக் வாங்க நாணயங்களை கொட்டிய இளைஞர்!

ஒரு மூட்டை 10 ரூபாய் காயின்ஸ்! பைக் வாங்க நாணயங்களை கொட்டிய இளைஞர்!

வைரல் வீடியோஸ்

வைரல் வீடியோஸ்

வாகனங்களை வாங்க இது போன்ற வினோதமான முறையை பயன்படுத்துவது இந்தியர்களுக்கு புதிதல்ல.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  சோஷியல் மீடியாக்களில் மற்றும் ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் வகையிலான விஷயங்களில் ஈடுபட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் பலர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

  இதன் ஒரு பகுதியாக பல்லாயிரக்கணக்கான அல்லது பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது ரொக்க பணமாக கொடுக்காமல், காயின்களாக கொடுத்து பர்ச்சேஸ் செய்யும் பழக்கம் நாட்டில் ஆங்காங்கே நடந்து வருகிறது. தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

  உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ராபூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரூ.50,000-க்கு வெறும் நாணயங்களை மட்டுமே பயன்படுத்தி தான் விரும்பிய டூ வீலரை வாங்கி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இளைஞர் TVS நிறுவனத்தின் ஜூபிடர் பைக்கை வாங்க முடிவு செய்து ருத்ராபூரில் இருக்கும் டிவிஎஸ் ஷோரூமிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் ரூ.50,000 டவுன் பேமென்ட் செலுத்தி தான் விரும்பும் ஜூபிடர் பைக்கை எடுத்து கொள்வதாக கூறி இருக்கிறார்.

  இதையும் வாசிக்க: மக்களே உஷார்! - தமிழகத்தை மீண்டும் மிரட்ட போகும் மிக கனமழை!

  இதை தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனத்தின் அந்த அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமில் டவுன் பேமென்ட்டான ரூ.50,000 செலுத்த, 5,000 காயின்களை கொடுத்துள்ளார். அந்த நபர் கொடுத்த காயின்கள் அனைத்துமே 10 ரூபாய் காயின்கள் ஆகும். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட வீடியோவில் பைக் வாங்கும் நபர் கொடுத்த 5,000 காயின்களை ஷோரூம் ஊழியர் எண்ணி சரிபார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், பல நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

  ' isDesktop="true" id="827180" youtubeid="Ng-o_Ay3ymQ" category="trend">

  ஆனால் வாகனங்களை வாங்க இது போன்ற வினோதமான முறையை பயன்படுத்துவது இந்தியர்களுக்கு புதிதல்ல. கார் மற்றும் பைக் போன்றவற்றை வாங்கிய சிலர் இதே போல சில்லறைகளையும், குறைந்த மதிப்பிலான நோட்டுகளையும் கொடுத்து உள்ளனர். எனினும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, ஒரு டீலர் ரூ.2 லட்சம் வரையிலான பேமென்ட்களை மட்டுமே ரொக்கமாக ஏற்று கொள்ள முடியும். அதற்கு மேல் ரொக்கமாக செலுத்தினால் டீலர் கூடுதல் வரி வசூலிக்க முடியும். ஆனால் வைரல் வீடியோவில் குறிப்பிட்டுள்ள TVS Jupiter பைக்கை பொறுத்தவரை, அதன் விலை ரூ.69,990 முதல் ரூ.85,246 வரை மட்டுமே இருக்கிறது. எனவே ஒருவரால் எந்த சிக்கலும் இன்று முழு பணத்தையும் செலுத்தி வாங்க முடியும்.

  இதையும் வாசிக்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா : சீனாவில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியே செல்ல தடை!

  நாட்டின் பல இடங்களில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் 10 ரூபாய் காயின் செல்லாது என்ற தகவல் பரவி பலரும் அதை வாங்க மறுத்த சம்பவம் நடந்தது. பொது இடங்களில் இதனால் பல வாக்குவாத சம்பவங்களும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் ரூ.10 நாணயங்களைப் பயன்படுத்தி ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கியதும், கடந்த பிப்ரவரி 2022-ல் அசாமை சேர்ந்த ஒரு நபர் ரூ.22,000-க்கு காயின்களை கொண்டு டவுன் பேமென்ட் செலுத்தி தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Video gets viral, Viral