Home /News /trend /

இந்த அவமானம் தேவையா... சாலையில் மது அருந்தி கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

இந்த அவமானம் தேவையா... சாலையில் மது அருந்தி கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

சாலையில் மது அருந்திக் கொண்டே வாகனம் ஓட்டிய இளைஞர்கள்

சாலையில் மது அருந்திக் கொண்டே வாகனம் ஓட்டிய இளைஞர்கள்

மழைநீர் கால்வாயில் உருண்டோடிய இளைஞருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது...

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிச் செல்லக் கூடாது, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், அதிவேகமாக வாகனத்தை இயக்கக் கூடாது, இதர போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று என்னதான் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தினாலும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் விதி மீறல்கள் என்பது தினசரி நிகவுகளாக இருக்கின்றன.

இந்தியாவை போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் ஏதேச்சையாக நடைபெறும் விதி மீறல்கள் சகஜமான விஷயம் தான். ஆனால், வேண்டுமென்றே சிலர் விதிகளை காற்றில் பறக்கவிட்டு, வாகனங்களை இயக்கி தானும் விபத்தில் சிக்குவதுடன் மட்டுமல்லாமல், பிறரையும் ஆபத்தில் நிறுத்தி விடுகின்றனர்.

குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் பைக் ஓட்டும்போது ஆபத்தான சாகச செயல்களை செய்கின்றனர். சில நேரங்களில் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அப்படியொரு வீடியோ தான் இணையதளத்தில் தற்போது வலம் வருகிறது.

பைக் பயணித்தபடி மது அருந்தும் காட்சி

இளைஞர்கள் இருவர் பைக்கில் பயணிக்கின்றனர். இருவரது கைகளிலும் மது கப் உள்ளன. கொஞ்சம், கொஞ்சமாக ரசித்து மதுவை உறிஞ்சியபடி, ஏதோ சொர்க்க லோகத்தில் இருப்பதை போல ஆனந்தமாய் பயணம் செய்கின்றனர். போதை தலைக்கு ஏறியதும், வாகனத்தின் முன்பக்கம் சாய்ந்து கொண்டு, ஏதோ பறக்கும் வித்தையை காண்பிக்கின்றனர்.

இளைஞர்கள் இருவருமே ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்யும் அதே வேளையில், பைக் ஓட்டுபவர் இரு கைகளையும் விட்டுவிட்டு சாகசகம் காட்டியபடி செல்கிறார். இந்த சமயத்தில், வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் தடுமாறி, அந்தரத்தில் பயணிக்க தொடங்குகிறார்.

ஒருபக்கம் வண்டியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மற்றொரு பக்கம் சாலையில் கால்கள் உரசியபடி சிக்கலில் மாட்டிய அந்த இளைஞர், மீண்டும் பைக்கில் ஏறி விட எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனால், சாலையோரத்தில் இருந்த மழைநீர் கால்வாயில் அந்த நபர் உருண்டு விழுந்து விட்டார்.



மழைநீர் கால்வாயில் உருண்டோடிய இளைஞருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. வீடியோவை பார்க்கும் பலரும் பொறுப்பற்ற இளைஞர்களை பல வகையிலும் கண்டித்து வருகின்றனர்.

Also see... நாவினால் ஓவியம் தீட்டும் இளைஞர்... யார் இந்த சுர்லா வினோத்!

உயிர்களின் மதிப்பு தெரியாமல், இவர்கள் ஆபத்தான காரியங்களை செய்திருப்பதாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். வீட்டில் உள்ள பெற்றோர், உடன் பிறந்தோர் போன்றவர்களை மனதில் நினைத்துப் பார்த்தால், இதுபோன்ற காரியங்களை செய்ய மாட்டார்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய சுய மகிழ்ச்சிக்காக இதுபோன்ற அபாயச் செயல்களில் ஈடுபடும் இவர்கள், சாலையில் பயணிக்கும் மற்ற மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி