Video | 4-வது மாடியில் இருந்து தவறிய குழந்தை... நொடிப்பொழுதில் பாய்ந்து காப்பாற்றிய தாய்...!

news18
Updated: June 28, 2019, 5:38 PM IST
Video | 4-வது மாடியில் இருந்து தவறிய குழந்தை... நொடிப்பொழுதில் பாய்ந்து காப்பாற்றிய தாய்...!
சிசிடிவி காட்சிகள்
news18
Updated: June 28, 2019, 5:38 PM IST
நான்காவது மாடியில் விளையாடும் போது திடீரென கீழே விழச்சென்ற குழந்தையை, தன்னை அறியாமல் பாய்ந்து சென்று தாய் காப்பாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கொலம்பியாவில் உள்ள மெடிலின் என்ற நகரில் தாயின் அன்புக்கு நிகரில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கொலோனியல் என்ற அடுக்குமாடி காட்டிடத்தில் இருக்கும் அலுவலத்திற்கு ஒரு பெண் தனது குழந்தையை அழைத்துக் கொன்று சென்றுள்ளார்.

தாய் போனில் பேசிக்கொண்டிருக்க துறுதுறுவென அங்குமிங்கும் ஓடிய குழந்தை விளையாட்டாக பால்கனியை எட்டிப்பார்த்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென குழந்தை தவறி கீழே விழுச் சென்ற நொடியில், சிறிதும் தாமதிக்காமல் தாய் பாய்ந்து சென்று குழந்தையின் காலைப்பிடித்து காப்பாற்றினார்.


அங்கிருந்தவர்கள் உதவியுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது அது வைரலாக பரவி வருகிறது.

First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...