ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விமானத்திற்குள் இளம் பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்... தாறுமாறு வைரலாகும் வீடியோ!

விமானத்திற்குள் இளம் பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்... தாறுமாறு வைரலாகும் வீடியோ!

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

‘எனக்கே எனக்கா’ என நம்மை நாமே ஸ்பெஷலாக உணரும் தருணங்கள் சிலருக்கு மட்டுமே வாழ்க்கையில் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

‘எனக்கே எனக்கா’ என நம்மை நாமே ஸ்பெஷலாக உணரும் தருணங்கள் சிலருக்கு மட்டுமே வாழ்க்கையில் கிடைக்கும், அப்படியொரு தருணம் பற்றி பெண் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவிட்ட வீடியோ தாறுமாறு வைரலாகி வருகிறது.

பேருந்து, ரயில் என எந்த பயணமாக இருந்தாலும் ஜன்னல் சீட் கிடைத்துவிட்டாலே மனசு குதூகலமாகிவிடும். அதிலும் நீங்கள் ஏறும் பஸ் அல்லது ரயிலில் பக்கத்து சீட்டில் யாருமே உட்காரவில்லை, நீங்கள் மட்டுமே வசதியாக அமர்ந்து பயணிக்கிறீர்கள் என்றால், அந்த பீலிங் சொர்க்கம் போல் இருக்கும் இல்லையா?. இந்த பீலிங்கை எல்லாம் அடித்து ஓரங்கட்டும் விதமாக முழு பிளைட்டில் இளம் பெண் ஒருவர் ‘தனியே தன்னந்தனியே’ பயணித்த வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

வாழ்நாளில் ஒருமுறையாவது நாம் இப்படி பயணிக்க மாட்டோமா? என பலரும் ஏங்கு வகையில், ஒரு முழு விமானத்தில் வேறு எந்த பயணிகளுமே முன்பதிவு செய்யாத நிலையில் அவர் மட்டுமே தனியாக பயணித்துள்ளார். விமானத்தில் தான் மட்டுமே பயணிப்பதை கண்டு இளம் பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விமான பணிப்பெண் அந்த பயணியை விமானிகளுடன் காக்பிட்டில் உட்கார்ந்து பயணிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். கரும்பு தின்ன கூலியா என இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணும் விமானிகளுடன் ஜாலியாக பயணித்துள்ளார். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்க கூடிய இந்த சந்தர்ப்பத்தை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

ALSO READ |  இந்த ஹோட்டலுக்கு சென்று 'நன்றி', 'ப்ளீஸ்' என்று சொன்னால் உங்களுக்கு சிறப்பு தள்ளுபடி நிச்சயம்

 அரோரா டோரஸ் என்பவர் நார்வேயில் உள்ள ரோரோஸுக்குச் செல்லும் முழு விமானத்திலும் தான் மட்டுமே முன்பதிவு செய்த ஒரே நபர் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டு போய், அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் அரோரோ டோரஸ் தான் மட்டும் தனியாக விமானத்தில் இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைவது, காலியான இருக்கைகள் மற்றும் விமானிகளுடன் காக்பிட்டில் அமர்ந்து பயணிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் விமானத்தின் முன் பகுதியில் இருந்து bird's eye வியூ போன்ற காட்சிகளை பதிவு செய்துள்ளார். இரண்டு விமானிகளுக்கு நடுவே அமர்ந்து குழந்தை போல் குதூகலமான மனநிலையுடன் அரோரா இருக்கும் வீடியோ காண்போர் மனதை கவர்ந்துள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Aurora Torres (@aurooratorres)இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும் 27,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த வீடியோவை கண்டு ரசித்துள்ளனர். "இது போன்ற விஷயங்கள் எனக்கு ஏன் நடக்கக்கூடாது?"  "முக்கிய நபராக  உங்களை உணரவைக்கும் தருணம்" என சமூக வலைதள பயனாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரே ஒரு பெண் பயணிக்காக விமானத்தை இயக்கிய விமான நிறுவனத்திற்கும் நெட்டிசன்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர். எரிபொருள் விற்கிற விலைக்கு இப்படிப்பட்ட சேவையை கொடுத்த உங்களுக்கு பைவ் ஸ்டார் அல்ல டென் ஸ்டார் ரேட்டீங்கே கொடுக்கலாம் என சோசியல் மீடியாவில் பாராட்டி வருகின்றனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Trending, Viral Video