• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • செல்போன் பேசியபடி கைக்குழந்தையுடன் குழிக்குள் விழுந்த பெண் ... வைரலாகும் வீடியோ

செல்போன் பேசியபடி கைக்குழந்தையுடன் குழிக்குள் விழுந்த பெண் ... வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

சாலையில் செல்லும் போது செல்போனில் பேசியவாறு இளம்பெண் கைக்குழந்தையுடன் குழிக்குள் விழுந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெண்கள் குழந்தைகளை கையில் வைத்திருக்கும் போது தயவு செய்து கவனமாக இருக்க வேண்டும் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

  • Share this:
    ஹரியானா மாநிலம் பரீதாபாத் நகரில் இளம்பெண் ஒருவர் இடுப்பில் குழந்தையுடன் செல்போனில் பேசிக்கொண்டே வந்து அருகில் இருந்த குழிக்குள் விழுந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    செல்போனில் பேசியபடியே சாலையில் நடந்து சென்ற இளம்பெண் அருகில் குழி ஒன்று இருந்ததை கண்டுகொள்ளவில்லை. குழியை கவனிக்காமல் உள்ளே குழந்தையுடன் விழுந்து விட அருகில் இருந்தவர்கள் அதனை கவனித்துள்ளனர். இந்த இடத்தில் குழி உள்ளது மக்கள் எச்சரிக்கயாக வரவும் என எச்சரிக்கை பலகை ஒன்று குழியின் அருகில் வைக்கப்பட்டு உள்ளது.

    அறிவிப்புப் பலகையையும் கவனிக்காமல், குழியையும் கவனிக்காமல் செல்போன் பேசிக்கொண்டே கீழே பார்த்து நடக்காமல் மேலே பார்த்தவாறு நடந்து குழிக்குள் பெண் விழுந்த அடுத்த நொடி உடனே அருகில் இருந்த மக்கள் விரைந்து வைத்து பெண்ணையும் , குழந்தையயும் மேலே எடுத்து காப்பாற்றி விட்டனர்.



    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். குழியை மூடாமல் இருந்தது தவறு என சிலரும், கைகுழந்தையுடன் வரும் போது கவனம் தேவை எனவும் இது குறித்து கமெண்ட்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    இணையத்தில் இது போன்று பல வீடியோக்கள் வைரலாகும், சமீபத்தில் தந்தை , மகன் இடையே நடந்த அழகிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று வைரலானது. அதில் அமெரிக்காவில் 11 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் சிறையில் இருந்து திரும்பிய அப்பாவைப் பார்த்து, மகன் கட்டியணைத்து கதறியழும் வீடியோ நெட்டிசன்களை இதயத்தை உருகச் செய்துள்ளது.



    புளோரிடாவைச் சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு, தான் செய்த குற்றத்திற்காக சிறை சென்றுள்ளார். அப்போது, அவருக்கு 2 வயதில் ஜவ்ஹோன் என்ற மகன் இருந்துள்ளார். சிறிய வயது என்பதால் சிறையில் இருந்த தந்தையை ஒருசில நிமிடங்கள் மட்டுமே சந்தித்த ஜவ்ஹோன், அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக அவரை சந்திக்கவே இல்லை.

    இந்நிலையில், அண்மையில் சிறையில் இருந்து ரிலீஸான ஜாஸ்மின் நேராக உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கே, தன் மகன் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகாமையில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர் தனது தந்தையை அடையாளம் கண்ட சிறுவன் தனது உணர்ச்சிகளை கண்ணீராக வெளிப்படுத்தி உள்ளார். பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: