கரடியின் திடீர் அட்டாக்.. தெறித்து ஓடிய பெண் - அதிகாரிகள் விசாரணை!

கரடியின் திடீர் அட்டாக்.. தெறித்து ஓடிய பெண்

அமெரிக்காவில் பூங்கா ஒன்றில் இருந்த கரடி சுற்றுலாப் பயணியை தாக்க முற்படும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
அமெரிக்காவின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தளங்களுள் எல்லோஸ் ஸ்டோன் பார்க்கும் ஒன்று. பரந்து விரிந்திருக்கும் இந்த பார்க்கை சுற்றிப் பார்க்க குறைந்தது 3 முதல் 5 நாட்களாவது தேவைப்படும்.

இந்த பார்க்கில் எரிமலை முதல் கிரிஸ்ஸி கரடிகள், ஓநாய் மற்றும் நரிகள், காட்டெருமைகள் என அரிய வகை விலங்குகளும் உள்ளன. வருடந்தோறும் எல்லோஸ் ஸ்டோன் பார்கை சுற்றிப் பார்க்க உலகம் முழுவதும் இருந்து லட்சகணக்கான சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர்.

கோடைகாலம், வசந்தகாலம் என அனைத்து பருவக் காலங்களுக்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாக இருப்பது இதன் சிறப்பு. தற்போது கோடைக்காலத்தின் இறுதிப் பகுதியும், வசந்தகாலத்தின் தொடக்கமாகவும் இருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த ஆண்டும் களைகட்டி வருகிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கிரிஸ்ஸி கரடிகள் மற்றும் காட்டெருமைகளை பார்த்து புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், புகைப்படம் எடுப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் பூங்கா அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | கொரோனாவை பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த வில்லங்க மாமியார்!

அந்த விதிகளை பின்பற்றாத பெண் ஒருவர், கிரிஸ்ஸி கரடிக்கு அருகாமையில் சென்று புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது, தன் குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த கரடி, திடீரென அந்தப் பெண்மணியை தாக்க வந்துள்ளது. அதிர்ச்சியுடன் பார்த்த சுற்றுலாப் பெண், அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறார்.

 
 

இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகியது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது. பூங்கா அதிகாரிகளின் கவனத்துக்கும் வீடியோ சென்ற நிலையில், அவர்கள் அந்த சுற்றுலாப் பயணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

100 மீட்டர் தொலைவில் இருந்து மட்டுமே விலங்குகளை பார்க்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனை பின்பற்றாமல் கரடிக்கு அருகாமையில் சென்று வீடியோ எடுத்த அந்தப் பெண்மணியை கரடி தாக்க வந்துள்ளது.

ALSO READ |  திருமண கொண்டாட்டத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய மணமகள் : போலீசாரிடம் சிக்கிய சோகம்!

இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள எல்லோஸ் ஸ்டோன் பார்க் நிர்வாகம், கரடிக்கு அருகாமையில் சென்ற பெண்ணின் அடையாளத்தை கொடுக்குமாறு சமூகவலைதளத்தில் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், விதிகளை முறையாக பின்பற்றி பூங்கா நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், மீறுவோர் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுற்றுலாப் பயணியின் செய்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர், ரசிப்பதற்காக பூங்காவுக்கு செல்லும்போது விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்றும், இதுபோன்ற சில நபர்கள் செய்யும் தவறான செயல் பலருக்கும் முன்னுதாரணமாக மாறிவிடுவதாகவும் விலங்குகள் நல ஆர்வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அந்தப் பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: