மனைவிக்கு ஆபத்து, மொபைலில் மூழ்கிய கணவன்... சிசிடிவி காட்சிகள் வைரல்

சிசிடிவி காட்சிகள்

என்னை விட உங்களுக்கு மொபைல் தான் முக்கியமா? என்ற வார்த்தையை கேட்காத கணவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

 • Share this:
  கணவன் - மனைவிக்கு இடையே சண்டை ஏற்படுவது வழக்கமான ஒன்று. சில சண்டைகள் நொடி பொழுதில் மறைந்து விடும், சில சண்டைகள் முடிவுக்கு வர நாட்கள், வாரங்கள் கூட ஆகலாம். அது அவர்களின் மனப்பான்மையை கொண்டது. ஆனால் அவர்கள் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் நேசித்து கொண்டு தான் இருப்பார்கள். தற்போது கணவன் - மனைவி இடையே ஏற்படும் சண்டைக்கு முக்கிய காரணமாக இருப்பது மொபைல் தான்.

  என்னை விட உங்களுக்கு மொபைல் தான் முக்கியமா? என்ற வார்த்தையை கேட்காத கணவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். பொதுவாக ஆண்கள் மொபைலை பார்க்க ஆரம்பித்துவிட்டால் இந்த உலகத்தையே மறந்து விடுவார்கள். அதனால் பல சிக்கல்களையும் எதிர்கொள்வார்கள். மொபைலில் கணவர் ஒருவர் மூழ்கியதால் மனைவிக்கு ஏற்பட்ட விபத்தை கூட அவர் பார்க்கவில்லை.  இந்த வீடியோவில் வரும் நபர் மேசை மீது அமர்ந்து மும்ரமாக மொபலை பார்த்து கொண்டுள்ளார். அவரது மனைவி எதிரில் உள்ள சேரில் உட்காரும் போது நிலை தடுமாறி கீழே விழுகிறார். அருகில் இருந்தும் அதை கூட கவனிக்காத அவரது கணவர் சீரியஸாக மொபைலை தான் பார்த்து கொண்டே உள்ளார். அவர் மொபைலில் தான் பிஸியாக இருக்கிறார். அங்கிருந்து கண்களை எடுக்கவில்லை.

  Also Read : என்னா அடி.. சட்டை கிழியும் அளவு சாலையில் கணவனை புரட்டி எடுத்த மனைவி! - வைரல் வீடியோ

  இந்த வீடியோவை பார்க்கும் போது சிரிப்பாக இருந்தாலும் இந்த நிலையில் பலர் மொபைலில் பிசியாக உள்ளனர். மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை கூட பார்க்க அவர்களுக்கு நேரமில்லாமல் இருக்கின்றனர். இது சிறிய விபத்து தான். ஆனால் இதுவே பெரிய விபத்துக்கு காரணமாக கூட இருக்கலாம். மொபைலில் நீண்ட நேரம் மூழ்கி இருக்காமல் அவ்வப்போது அருகில் இருப்பவர்களையும் கவனித்து கொண்டால் அதுவே பெரிய உபசரிப்பாக தான் இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: