• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பாம்பை வேட்டையாடி கொறித்து உணவாக்கிய அணில் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

பாம்பை வேட்டையாடி கொறித்து உணவாக்கிய அணில் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

தற்போது அணில் ஒன்று பாம்பினை வேட்டையாடி அதனை கொறித்து உண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    அணில்கள் குட்டி போட்டு தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. அணில்கள் தங்களுக்கு ஆபத்து வரும் போது பயங்கரமாக ஒலியெழுப்பி எதிரியின் கவனத்தைத் திசை திருப்பும். அணில் மரங்களிலும், வீடுகளில் மறைவான இடங்களில் பறவையைப்போல் கூடு கட்டியும் வசிக்கும். தேங்காய் நார், பஞ்சு முதலியவைகளைக் கொண்டு கூடுகட்டும். அணில் பெரும்பாலும் விதைகள், கொட்டைகள், பழங்கள் முதலியவற்றையே உணவாக உட்கொள்ளும்.

    அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை. கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும். பழங்களை மட்டுமே அணில்கள் கொறித்து உண்ணும் என கேள்விப்பட்டிருந்த நிலையில் தற்போது அணில் ஒன்று பாம்பினை வேட்டையாடி அதனை கொறித்து உண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அணில் ஒன்று குட்டி பாம்பினை சண்டைக்கு இழுக்கிறது.



    பாம்பு அணிலை பிடிக்க முயற்சிக்கையில் யாரும் எதிர்பாராத விதமாக பாம்பினை அணில் பிடித்து கொறித்து உண்டது. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி உள்ளது.இதற்கு அடுத்த படியாக சிங்கத்தின் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் தண்ணீர் பருக வந்த சிங்கம் ஒன்று தண்ணீரை குடித்து கொண்டிருக்கையில் நாக்கின் உள்ளே நாசுக்காக வந்து நிற்கின்றது ஆமை ஒன்று. சிங்கம் அண்ணே நாம ரெண்டுபேரும் நண்பர்கள் ஆவோமா என கேட்பது போல் சிங்கத்தின் நாக்கினை மெல்ல வருடி கொடுத்து சிங்கத்தை சீண்டி பார்க்கின்றது ஆமை.



    சிங்கம் காட்டில் உள்ளதை அடித்து உண்ணும் விலங்கு. ஆமை வான்டடாக வாய்க்குள் வந்த போதும் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு சிங்கம் நகர்ந்து சென்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    கடந்த மாதம் அணில் ஒன்று கூடைப்பந்து விளையாடும் ஆட்டக்காரரிடம் இணைந்து விளையாடும் வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தது. அதில் கூடைப்பந்து மைதானத்தில் புகுந்த அணில் ஒன்று எவ்வித பயமும் இன்றி அங்கிருந்த பந்தினை உருட்டி விட முயற்சி செய்கின்றது. தனது வாலை வைத்து பந்தினை எதிரில் இருக்கும் நபருக்கு திருப்பி அனுப்புகிறது.

     



    பின்னர் தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளும் படி அருகில் இருந்த விளையாட்டு வீரருடன் சேர்ந்து விளையாடி மகிழ்கின்றது.இந்த வீடியோ இணையத்தில் கடந்த மாதம் வைரலானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: