முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஆதார் கார்டு இருந்தால்தான் கல்யாண சப்பாடு... பெண் வீட்டாரின் செயலால் அதிர்ந்த உறவினர்கள்

ஆதார் கார்டு இருந்தால்தான் கல்யாண சப்பாடு... பெண் வீட்டாரின் செயலால் அதிர்ந்த உறவினர்கள்

ஆதார் இருந்தால் தான் கல்யாண விருந்து

ஆதார் இருந்தால் தான் கல்யாண விருந்து

கூட்டத்தைக் குறைக்க எண்ணினார்களோ என்னவோ, மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன், விருந்தினர்கள் தங்களது ஆதார் அட்டையை காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

கோவிட் காலகட்டத்தில் 50 நபர்கள், 100 நபர்கள் மட்டும் வைத்து நடந்து வந்த திருமணங்கள் மாறி இப்போது தான் பழைய நிலைக்கு திரும்பி சொந்த பந்தங்கள் நிறைந்த திருமணங்களாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் திருமணத்திற்கு வந்த பெரும் கூட்டத்தை பார்த்த பெண்வீட்டார் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் ஒரு திருமணத்தில் வந்த விருந்தினர்கள் அந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் ஆதார் அட்டைகளைக் காட்டும்படி கேட்கப்பட்டுள்ளனர். இது திருமணத்திற்கு வந்த விருந்தினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

அம்ரோஹாவின் ஹசன்பூரில் இரண்டு சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது. விழா நடைபெறும் இடத்திற்கு வந்திருந்த விருந்தினர் கூட்டத்தைப் பார்த்து மணமகள் தரப்பு சற்று அதிர்ந்துள்ளது. அதில் பலர் தெரியாத முகங்களாக இருந்துள்ளனர்.

இந்த கூட்டத்தைக் குறைக்க எண்ணினார்களோ என்னவோ, மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன், விருந்தினர்கள் தங்களது ஆதார் அட்டையை காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆதார் காட்ட முடிந்தவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மத்தியப்பிரதேசத்தில் சேற்றில் சிக்கிய லாரியை மீட்ட யானை - வைரலாகும் வீடியோ!

அதேபோல் ஒரு மணிக்கு உணவு பரிமாறத் தொடங்கியதும், மற்ற திருமண விருந்தினர்களும் உள்ளே நுழைந்தனர். குழப்பத்தின் மத்தியில், மணமகளின் குடும்பத்தினர் கலக்கமடைந்து உணவு வழங்குவதை நிறுத்த முடிவு செய்தனர். கூட்டத்தை சமாளிக்க ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்தனர். ஆதார் அட்டை இருந்தால் தான் திருமண விருந்து. மற்றவர்களுக்கு கிடையாது என்று தெரிவித்தனர்

ஆதார் அட்டை இல்லாமல் வந்த நெருங்கிய நண்பர்கள், சொந்தங்களும், உண்மையாக அந்த திருமணத்திற்கு வந்த விருந்தினர்களும் இதனால் திருப்பி அனுப்பப்பட்டனர். இது அவர்களுக்கு பெரும் சங்கடத்தையும் முக சுளிப்பையும் ஏற்படுத்தியது. ஆதார் கேட்டு உள்ளே அனுப்பும் வீடியோ இணையத்தில் பரவி பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

First published:

Tags: Aadhar, Marriage, Uttar pradesh