• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இணையத்தை கலக்கும் ஆடு மற்றும் குரங்கின் நட்பு - மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகும் வீடியோ

இணையத்தை கலக்கும் ஆடு மற்றும் குரங்கின் நட்பு - மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகும் வீடியோ

இணையத்தை கலக்கும் ஆடு மற்றும் குரங்கின் நட்பு

இணையத்தை கலக்கும் ஆடு மற்றும் குரங்கின் நட்பு

முகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு எனும் விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாக குரங்கு ஒன்று மரத்தின் மீது ஏறி பழங்களை பறித்து நண்பனுக்கு கொடுத்து உண்ணும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    குட்டி குரங்கு ஒன்று இளஞ்சிவப்பு நிற உடையில் மரத்தின் மீது ஏறி தனது நண்பனுக்கு உணவு எடுத்து விட்டு வரும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    அந்த வீடியோவில் குட்டி குரங்கு ஒன்று சட்டை அணிந்து கூடை பையை கையில் வைத்துக்கொண்டு திராட்சை பறிக்க புறப்படுகிறது. காடு தாண்டி, மலை தாண்டி , மரம் ஏறி திராட்சையை பறித்த பின்னர் மரத்தின் கொப்பினை பிடித்துக்கொண்டு கீழே இறங்கி வருகின்றது.



    பின்னர் பறித்ததை பக்குவோமாக எடுத்து வந்து ஆடு ஒன்றுடன் தரையில் அமர்ந்து உண்கின்றது. இருவரும் இணைந்து உணவை பிரித்துக்கொண்டு உண்பது மட்டும் அல்லது குரங்கு ஆட்டிற்கு வாயில் ஊட்டி விடுகின்றது.



    ஆட்டின் மீது அமர்ந்து , படுத்துக்கொண்டு என இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் போல உணவினை ருசித்து உண்கின்றனர்.

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு.

    முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.எனும் திருக்குறளின் விளக்கத்திற்கு ஏற்ப ஆடு மற்றும் குரங்கின் செயல் அமைந்துள்ளது.



    இந்த வீடியோ யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது. அனிமல்ஸ் ஹோம் (Animals Home) எனும் யூடியூப் சேனல் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.



    கடந்த மாதம் செப்டம்பர் 27 அன்று இந்த வீடியோ பகிரப்பட்டது தற்போது வரை 1.9 மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவை கண்டு கழித்துள்ளனர். இதே போன்று மனித குரங்கு ஒன்று மீன்களுக்கு உணவளித்த வீடியோ ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.

     

     



    அதில் , மரபாலத்தின் மீது அமர்ந்து இருந்த மனித குரங்கு ஒன்று தனது அருகில் மீன்களுக்கான உணவுகள் வைத்துக் கொண்டு அமர்ந்து உள்ளது. உணவுகளை தனது கைகளில் எடுத்து நீரில் உணவினை போடுகின்றது. உடனே கூட்டம் கூட்டமாக மீன்கள் வந்து இரையை உண்கின்றது. இந்த வீடியோவிற்கு பலரும் கமெண்ட் செய்து உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: