Home /News /trend /

Valimai Making Video | ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த வலிமை மேக்கிங் வீடியோ

Valimai Making Video | ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த வலிமை மேக்கிங் வீடியோ

வலிமை மேக்கிங் வீடியோ

வலிமை மேக்கிங் வீடியோ

Viral Video : இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் வலிமை மேக்கிங் வீடியோ , மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டி , நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு , விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் புது வீடு பால் காய்ச்ச போறோம் வீடியோ , நாய் சேகர் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ ட்ரெண்டாகி உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்திற்கு வலிமை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் எழுதி இயக்குகிறார். விஸ்வாசம், வீரம், விவேகம் உள்ளிட்ட படங்களில் பெப்பர் சால்ட் ஹேர் ஸ்டைலில் நடித்து வந்த அஜித்குமார், இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் பிளாக் ஹேர்ஸ்டைலில் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.

  இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சோனி மியூசிக் சவுத் தங்கள் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது வரை இந்த வீடியோவை 3,940,311 பேர் பார்த்துள்ளனர். ட்ரெண்டிங்கில் முதல் இடமும் பிடித்துள்ளது.  இஸ்ரேல் நாட்டின் ஈலாட்டில் (Eilat) உள்ள யுனிவர்ஸ் டோமில் (Universe Dome) நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து (Harnaaz Sandhu). 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் மிஸ் யுனிவர்ஸ் படத்தை வென்றுள்ளது நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிஸ் யுனிவர்ஸ் 2021 பட்டம் வென்ற தருணங்கள் யூடியூபில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. மிஸ் யூனிவெர்ஸ் தங்கள் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இதுவரை இந்த வீடியோவை 4,048,973 பேர் பார்த்துள்ளனர்.  நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீசர் வீடியோ அடுத்ததாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. சிம்பு நடிப்பில் மூன்று படங்கள் தயாராகின்றன. வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமாரு. இதில் வெந்து தணிந்தது காடு படத்துக்கு முக்கியத்துவம் தந்து நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்கி வருகிறார். ஜெயமோகன் கதை, ஐசரி கணேஷ் படத்தை தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

  Also Read :  Rewind 2021: இந்த ட்ரெண்டை பாத்தீங்களா? முதலிடத்தில் விஜய்... கடைசி இடத்தில் அஜித்

  தனுஷின் அசுரன் போல் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற சிம்புவின் ஆசையின் விளைவாக தயாராகி வரும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இதில் சிம்புவின் ஒல்லியான அழுக்கான கெட்டப் ரசிகர்களிடையே பேசு பொருளானது. மாநாடு வெற்றிக்குப் பின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் சிம்புப் படமாக வெந்து தணிந்தது காடு உள்ளது.  ட்ரெண்டிங்கில் 9 வது இடத்தில் உள்ளது விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவின் புது வீடு பால் காய்ச்ச போறோம் வீடியோ. இந்த வீடியோவை இதுவரை 2,411,145 பேர் பார்த்துள்ளனர்.  அறந்தாங்கி நிஷா தனது வீட்டில் சமைத்து மகிழ்வாக உறவுகளுடன் உண்ணும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இவரது வீடியோவிற்கு பலரும் எவ்வளவு தான் உழைத்தாலும் குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும் நேரம் பொன்னானது. வாழ்த்துக்கள் சகோதரி. என கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

  Also Read : அதிரடியாக சந்தா கட்டண விலையை குறைத்த நெட்பிளிக்ஸ் - புதிய அறிவிப்புகள் இதோ!

  இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, மலையாள நடிகர் ஃபகத் பாசில் இதில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'புஷ்பா' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.  புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 5,151,085 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. உடற்பயிற்சி கூடத்தில் ஏற்படும் பரிதாபங்கள் என கோபி சுதாகர் வீடியோ ஒன்று யூடியூபில் வைரலாகி உள்ளது. ட்ரெண்டிங்கில் இந்த வீடியோ 7ம் இடத்தில் உள்ளது.  நாய் சேகர் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை லைகா நிறுவனம் தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். வடிவேலு நடிப்பதற்கு போடப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. படத்தை லைகா தயாரிப்பதாகவும் முடிவானது. அடுத்தகட்டமாக இந்த படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகி உள்ளது.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் சத்யா சீரியலின் ப்ரோமோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 769,539 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இந்த வீடியோ 38 வது இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.  பாமி உலகம் எனும் யூடியூப் பக்கத்தில் உள்ள Guess "TAMIL YOUTUBERs" with EMOJIs என்ற தலைப்பின் கீழ் பகிரப்பட்டுள்ள வீடியோ ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ளது. 10 வது இடத்தில் இந்த வீடியோ ட்ரெண்டாகி உள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ட்ரெண்ங்கில் 12ம் இடம் பிடித்துள்ளது. 4,163,073 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.  இன்னைக்கு என்ன சமையல் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ட்ரெண்டிங்கில் 8ம் இடத்தில் உள்ளது. 610,579 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் ப்ரோமோ வீடியோ ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ளது. 5,652,652 பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Ajithkumar, Trending, Valimai, Youtube

  அடுத்த செய்தி