• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தாகத்தால் தவித்த எருமை மாடு தாகம் தீர்க்க செய்த செயல் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தாகத்தால் தவித்த எருமை மாடு தாகம் தீர்க்க செய்த செயல் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : எருமை மாடு ஒன்று தாகம் தாங்காமல் அடிபம்பில் தன் கையே தனக்குதவி என்பது போன்று நீரை அடித்து குடிக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    எருமை மாடு ஒன்று தாகம் தாங்காமல் தாகம் தீர்க்க அடிபம்பினை அடித்து தண்ணீர் அருந்தும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    ஐபிஎஸ் அதிகாரியான டிபன்ஷு கப்ரா (Dipanshu Kabra) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எருமை மாடுகள் கூட்டமாக நிற்கையில் ஒன்று மட்டும் தாகத்தை தணிக்க அருகில் இருக்கும் அடிபம்பை தனது கொம்பினால் முட்டி போராடி நீரினை அருந்தி வருகின்றது. பின்னர் அருகில் இருக்கும் மற்றொரு மாடும் தாகம் தீர்த்துக் கொள்கின்றது.



    இந்த வீடியோவை இதுவரை 214.9 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 154 ரீட்வீட் மற்றும் 15 லட்சம் லைக்ஸ்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. இதே போன்று பாம்பு ஒன்று தண்ணீரை அருந்திய செயல் இணையத்தில் வைரலானது. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வந்தனர். அதில் கருமை நிறத்திலான பாம்பு ஒன்று கண்ணாடி குவளையில் உள்ள தண்ணீரை அருந்தி தனது தாகம் தீர்க்கிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Royal Pythons (@royal_pythons_)






    இந்த வீடியோவை royal_pythons எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பக்கத்தில் பாம்புகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் பதிவிடப் படுகின்றன. விதவிதமான வண்ணத்தில் உள்ள பாம்புகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இதில் பதிவு செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: