திருடனை பிடிக்க வைத்த சிசிடிவி கேமிராவில் பதிவான திகில் காட்சிகள்

புனேவில் மாதுளை பயிரிடும் விவசாயி திருடர்களுக்கு பயந்து வைத்திருந்த சிசிடிவியில் அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்று பதிவாகி உள்ளது.

திருடனை பிடிக்க வைத்த சிசிடிவி கேமிராவில் பதிவான திகில் காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்
  • Share this:
புனேவின் லாக்கி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர வாலுஞ் என்பவர் அவரது விவசாய நிலத்தில் மாதுளை பயிரிட்டுள்ளார். வீட்டின் முன் 35 ஏக்கரில் மாதுளை தோட்டம் இவர் பயிரிட்டுள்ளதால் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

எனவே திருடர்களின் வசமாக பிடிக்க தனது வீடு மற்றும் தோட்டத்தை சுற்றிலும் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்தி உள்ளார். தனது சிசிடிவி கேமிரா காட்சிகளை அவர் ஆராய்ந்த போது அவரது மாட்டு கொட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று பதிவாகி உள்ளது.

ராஜேந்திர வாலுஞ்சிவிற்கு சொந்தமான மாட்டு கொட்டையில் கன்னுக்குட்டி உட்பட 5 மாடுகள் உள்ளது. மேலும் நாட்டுக் கோழிகளையும் அவர் வளர்த்து வந்துள்ளார். இரவு நேரத்தில் அவரது கொட்டகையில் சிறுத்தை ஒன்று நுழைந்து உள்ளது.
சிறுத்தையின் நடமாட்டத்தால் பசு மாடுகள் அச்சமடைந்து திணறி உள்ளது. பசுமாடுகள் கூட்டமாக இருந்ததால், சிறுத்தை கோழிகளை தனக்கு இரையாக்கி கொண்டது. பசுமாடுகள் நல்வாய்ப்பாக சிறத்தையின் தாக்குதலில் இருந்து தப்பி உள்ளது.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்த விவசாயி வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கிராமத்திற்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading