வெடிகுண்டா... வெறுங்குண்டா...! போரின் நடுவே மகளை சிரிக்க வைக்கும் தந்தை

வெடிகுண்டா... வெறுங்குண்டா...! போரின் நடுவே மகளை சிரிக்க வைக்கும் தந்தை
போரின் நடுவே மகளை சிரிக்க வைக்கும் தந்தை!
  • News18 Tamil
  • Last Updated: February 19, 2020, 12:40 PM IST
  • Share this:
சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே நடத்தப்படும் வான்வெளித் தாக்குதலின் நடுவே தனது குழந்தை ஒன்றை சிரிக்க வைக்கும் தந்தையின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது சாராகுப் பகுதி. இங்கு வசித்து வந்த பலர் போர் காரணமாக வெளியேற்ற பட்டுள்ளார். அவ்விதம் வெளியேற்றப்பட்ட நபர் தான் அப்துல்லா. இவர் தற்போது தனது நண்பரின் இல்லத்தில் 3 வயது மகளுடன் வசித்து வருகின்றார்.

இவர் தனது மகளுக்கு போர் காரணமாக வெளியில் வெடிகுண்டு சத்தம் கேட்டால் சிரிக்க வேண்டுமென சொல்லி கொடுக்க 3-வயது குழந்தையும் அவ்விதமே செய்கிறாள். இந்த வீடியோ இணையத்தில் பலரது மனதையும் இன்பம் கலந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


அப்துல்லா தனது மகளிடம் வெடிகுண்டு சத்தம் கேட்டதும், விமான சத்தமா ? வெடிகுண்டு சத்தமா / (is this a jet or a bomb) என கேட்க அதற்கு குழந்தை வெடிகுண்டு என கூறிய படி சத்தமாக சிரிக்கிறாள். இந்த வீடியோவை லண்டனை தலைமையகமாகக் கொண்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 Also see...ப்ளூ வேல் சேலஞ்ச்-க்கு அடுத்தபடியாக வந்துள்ள ஸ்கல் பிரேக்கர்...! ஆபத்தான சேலஞ்ச்... உஷார்...!

 
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading