• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தாகம் தணிக்கும் சிங்கத்தை விடாமல் துரத்தும் ஆமை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தாகம் தணிக்கும் சிங்கத்தை விடாமல் துரத்தும் ஆமை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

தண்ணீர் பருக வந்த சிங்கம் ஒன்று தண்ணீரை குடித்து கொண்டிருக்கையில் நாக்கின் உள்ளே நாசுக்காக வந்து நிற்கின்றது ஆமை ஒன்று. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    தாகம் தணிக்க வந்த சிங்கம் ஒன்றை ஆமை ஒன்று விடாமல் துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    மனிதர்கள் காட்டுக்கே ராஜா என சிங்கங்களுக்கு பெயர் கொடுத்தாலும் தனக்கென தனித் தனிமையை கொண்டிருப்பது சிங்கங்கள். தன் பசி தன் உணவு என வேட்டையாடி உண்டு காட்டில் காலத்தை கடந்து வந்தாலும் அவ்வப்போது சிங்ககளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் இடையே சில சுவாரசிய சம்பவங்களும் காடுகளில் அரங்கேறுவதுண்டு.

    அவ்விதம் தற்போது தண்ணீர் பருக வந்த சிங்கம் ஒன்று தண்ணீரை குடித்து கொண்டிருக்கையில் நாக்கின் உள்ளே நாசுக்காக வந்து நிற்கின்றது ஆமை ஒன்று. சிங்கம் அண்ணே நாம ரெண்டுபேரும் நண்பர்கள் ஆவோமா என கேட்பது போல் சிங்கத்தின் நாக்கினை மெல்ல வருடி கொடுத்து சிங்கத்தை சீண்டி பார்க்கின்றது ஆமை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    ஆமையின் தொந்தரவு தாங்காமல் சிங்கமோ சற்று தள்ளி மற்றொரு இடத்தில் சென்று நீர் அருந்த ஆமை சிங்கத்தை விட்ட பாடில்லை. என்னை உங்க நட்பு வட்டாரத்துல சேத்துக்கோங்க என கூறும் படி இருந்தது ஆமையின் செயல். இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    After taking the booster dose என்ற தலைப்பின் கீழ் இந்த வீடியோவை சுசந்தா நந்தா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரின் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் ஆமையின் செயலுக்கு நகைச்சுவையாக இணையத்தில் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: