• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இரண்டு பாம்புகள் சண்டையிடும் காட்சி - இணையத்தில் வைரலாகும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ

இரண்டு பாம்புகள் சண்டையிடும் காட்சி - இணையத்தில் வைரலாகும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ

மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ

மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ

ராஜ நாகம் இரண்டு ஒன்றொன்று பின்னி பிணைந்து கொண்டு படமெடுக்கும் வீடியோ இணையத்தில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

  • Share this:
    பீகாரில் உள்ள பாட்னா உயிரியல் பூங்காவில் இரண்டு பாம்புகள் விளையாடிக் கொண்டு இருக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    இரண்டு நாகப்பாம்புகளின் வீடியோவை பீகார் அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை முதன்மைச் செயலாளர் தீபக் குமார் சிங் ட்விட்டரில் பகிர்ந்ததை அடுத்து வைரலானது. வைரலான வீடியோ நெட்டிசன்களை முழுவதுமாக மகிழ்வித்துள்ளது. இதனை ட்விட்டரில் பலரும் ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

    1.32 நிமிடம் நீளமான அந்த வீடியோவில், இரண்டு பாம்புகளும் தரையில் தலையை விரித்த படி தங்கள் நிற்பதைக் காணலாம். மேலும், வீடியோ தொடரும் போது, ​​நாகப்பாம்புகளில் ஒன்று விளையாட்டுத்தனமாக மற்றொன்றைத் தாக்க முயல்கிறது, மேலும் மீண்டும் தனது தலையை உயர்த்தியபடி நிற்கின்றது.
    குறுகிய வைரல் வீடியோ கிளிப் 2.9 k பார்வைகளைப் பெற்றுள்ளது.



    இது போன்று சமீபத்தில் வானில் இருந்து கீழே விழுந்த பாம்பின் வீடியோ வைரலானது. தீடிரென நீளமான பாம்பு ஒன்று வானத்திலிருந்து சாலையில் விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த வீடியோவில் மிக நீளமான பாம்பு ஒன்று வானில் இருந்து விழுவது போல் இருக்கும். ஆனால் அந்த பாம்பு கம்பி ஒன்றில் நீண்ட நேரமாக அமர்ந்துள்ளது. மெதுவாக பாம்பு அதன் பிடியை தளர்த்தி தரையில் விழுகிறது. பாம்பு கம்பியில் இருப்பதை பார்த்து அங்கிருக்கும் மக்கள் ஆரவார கூச்சலிடுகின்றனர். பாம்பு சாலையில் விழுந்த உடனை பிடிக்க மீட்பு படையினரும் அங்கு தயார் நிலையில் இருந்தனர்.



    பாம்பு கம்பி மீது இருந்த வரை அந்த இடத்தில் தைரியமாக இருந்த பலர் விழுந்த உடன் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமீபத்தில் வைரலாக இணையத்தில் பரவியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: