ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஏற்றம் உண்டானால், இறக்கமும் உண்டு ... எப்படி பயணிக்கிறது? கற்றுக்கொடுக்கும் குரங்கு - வைரல் வீடியோ

ஏற்றம் உண்டானால், இறக்கமும் உண்டு ... எப்படி பயணிக்கிறது? கற்றுக்கொடுக்கும் குரங்கு - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video : குரங்கு சறுக்கி மேலேறும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பலரின் மனங்களையும் வென்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வாழ்வில் ஏற்றம் உண்டானால் , இறக்கமும் உண்டு இரண்டையும், எதிர்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும் என்பதை குரங்கு ஒன்று அழகாக வலியுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஹெலிகாப்டர் யாத்ரா எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், குரங்கு ஒன்று நடப்பதற்காக போடப்பட்டுள்ள படிகளில் அருகில் உள்ள கம்பியை பிடித்த படி ஏற்ற , இறக்கத்தோடு விளையாடி மகிழ்கின்றது. படியில் இறங்கிச் செல்லாமல் கம்பியில் ஆனந்தமாக குரங்கு சறுக்கி மேலேறும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பலரின் மனங்களையும் வென்றுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 9,591 பேர் லைக் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் யாத்ரா இன்ஸ்டாகிராம் பக்கம் 2.5 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர்.
 
View this post on Instagram

 

A post shared by SACHIN AWASTHI (@helicopter_yatra_)இதே போன்று சமீபத்தில் குரங்கு ஒன்று மொபைல் போனை பார்த்தபடி வியந்த செயல் வைரலானது. குரங்குகள் சில கூட்டமாக மொபைல் போனை பார்த்துக் கொண்டு கைகளால் ஸ்க்ரீனை மாற்றி போனில் அப்படி என்ன தான் இருக்கின்றது என ஆச்சர்யமாக பார்த்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்தது.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 3 குரங்குகள் ஒன்றாக அமர்ந்து கொண்டு மனிதரின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனின் தொடுதிரையை என்ன இது ஒன்றும் புரியவில்லை இதனை கையில் வைத்துக் கொண்டு அனைவரும் சுற்றுகின்றனர் என்பது போல் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றது. இந்த வீடியோவை ஸ்மார்ட் போன் அடிக்சன் என்ற தலைப்பில் ஐ.ஏ.அதிகாரி எம்.வி.ராவ் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Viral Video