ஒரு ஆட்டோவில் 24 பேர் பயணம்: அதிர்ச்சியடைந்த காவலர்! வைரல் வீடியோ

Vijay R | news18-tamil
Updated: August 12, 2019, 9:03 PM IST
ஒரு ஆட்டோவில்  24 பேர் பயணம்: அதிர்ச்சியடைந்த காவலர்! வைரல் வீடியோ
ஆட்டோவில் பயணித்தவர்கள்
Vijay R | news18-tamil
Updated: August 12, 2019, 9:03 PM IST
தெலங்கானாவில் ஒரே ஆட்டோவில் 24 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நம்மில் பலர் பயணம் செய்வதற்கு ஆட்டோவை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது குறைந்த கட்டணத்தில் விரைவாக சென்று சேர்வதற்காக தான் இருக்கும். பெருகி வரும் மக்கள்தொகையின் காரணமாக பலர் லாபத்திற்காக ஆட்டோவை ஷேர் ஆட்டோவாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஷேர் ஆட்டோவிலும் அதிக அளவிலான பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதைப் பார்த்திருப்போம். சென்னை போன்ற பெருநகரங்களில் பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் ஷேர் ஆட்டோவில் ஒருவர் மடி மீது மற்றொருவர் அமர்ந்து செல்லும் அளவில் கூட்டம் அலைமோதும்.

குறைந்தபட்சம் ஒரு ஆட்டோவில் 10 பயணிகள் முதல் 15 பேர் வரை நம்ம ஊர்ல பயணம் செய்வதை பார்த்திருப்போம். இவர்கள் அனைவரையும் மிஞ்சும் படி தெலுங்கானாவில் 24 பயணிகளை ஏற்றி சென்றுள்ளார் ஆட்டோ ஓட்டுநர். அதிக அளவிலான் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோவை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் பயணிகளை கீழே இறங்க சொல்லி உள்ளனர்.ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உட்பட 24 பேர் உள்ளதை போலீசார் கணக்கெடுத்து காட்டி உள்ளனர். இந்த வீடியோவை கரீம்நகர் காவல் ஆணையர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் மக்கள் தங்களது பயணத்தில் பாதுகாப்பை அவர்கள் தான் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்ள கூடாது என்றும் அதில் பதிவிட்டுள்ளனர்.

Also Watch

First published: August 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...