வாத்துகளுக்கு வழிகாட்டிய அன்னப்பறவை... இணையத்தில் வைரலாகும் நெகிழவைக்கும் வீடியோ
வாத்துகளுக்கு வழிகாட்டிய அன்னப்பறவை... இணையத்தில் வைரலாகும் நெகிழவைக்கும் வீடியோ
நெகிழவைக்கும் வீடியோ
அன்னப்பறவைகள் தண்ணீரில் நீந்தி தனக்கு முன்னர் இருக்கும் பனிக்கட்டிகளை உடைத்து வாத்துக்கூட்டங்களுக்கு வழி அமைத்துக் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விலங்குகள் மற்றும் பறவைகள் செய்யும் செயல்கள் மனிதர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளது. அவ்விதம் சமீபத்தில் பூங்காவில் உள்ள சீசா விளையாட்டினை பறவை ஒன்று தன்னந்தனியே விளையாடி மகிழும் வீடியோ இணையத்தில் வைரலானது. சீசாவின் ஒருபக்கம் சென்ற பறவை மேலே செல்கின்றது. பின்னர் அதன் மறுபக்கம் சென்று கீழே வருகின்றது. பறவையின் இந்த கியூட்டான செயல் இணயத்தில் பலரது மனங்களை வென்று வைரலானது.
இதே போன்று தன்னால் இயன்ற அன்பினை நாய் ஒன்று மனிதருக்கு செலுத்திய வீடியோ இணையத்தில் சமீபத்தில் வைரலானது. வீடியோவில் நாய் ஒன்று வீடற்ற நிலையில் தெருவில் அமர்ந்திருக்கும் மனிதனை பார்த்துக் கொண்டே உள்ளது.
மனிதன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்ததால் நாய் அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. சில வினாடிகளுக்குப் பிறகு, நாய் மனிதனுக்குத் தேவையான அணைப்பைக் கொடுத்தது. அந்த மனிதன் நாயை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து அன்பு செலுத்தினான்.
தற்போது வாத்துக்கள் கூட்டமாக நீரில் நீந்த முடியாமல் தவிக்கின்றது. நீர் முழுவதும் மேலோட்டமாக பனிகள் சூழ்ந்து காணப்படுவதனால் அதனை உடைத்துக் கொண்டு அன்னப்பறவை வாத்துகளுக்கு வழியினை அமைத்துக் கொடுக்கின்றது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Swan pair breaks up ice for ducks and geese to swim through frozen lake.🦢🦢🦆🦆🌊❤️ pic.twitter.com/TrXdNsV1Oi
19-வினாடிகள் அடங்கிய அந்த வீடியோவில் இரண்டு அன்னப்பறவை இணைந்து கொண்டு தனது உடலை வைத்து தனக்கு முன்னர் இருக்கும் பனிக்கட்டிகளை உடைத்து பின்னர் வரும் வாத்துகளுக்கு வழி விடுகின்றது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.