Home /News /trend /

தினமும் 2 கி.மி நடந்து சென்று உரிமையாளருக்கு உணவு கொண்டு சேர்க்கும் நாய் - வைரல் வீடியோ

தினமும் 2 கி.மி நடந்து சென்று உரிமையாளருக்கு உணவு கொண்டு சேர்க்கும் நாய் - வைரல் வீடியோ

Trending

Trending

Viral Video | உரிமையாளர் மீதான நாயின் அன்பை எடுத்துக்காட்டும் வகையில் சாலையோரம் ஒரு நாய் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரோட்டோரம் நாய் நடந்து செல்வதற்கும், உரிமையாளர் மீதான விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

மேலும் படிக்கவும் ...
செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களின் வீடுகளில் அதிகம் காணப்படுபவை நாய்கள் தான். நம் நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி நாய்கள் முக்கிய செல்ல பிராணிகளாக இருக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் கிட்டத்தட்ட மற்றொரு குடும்ப உறுப்பினரை போலவே பாவிக்கப்படுகின்றன.

வீட்டு பாதுகாப்பில் நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனிதர்களின் உற்ற நண்பனாக இருப்பதை நாய்கள் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளன. விசுவாசம் மிக்கவை மற்றும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புபவை. தங்களின் பல வித செயல்பாடுகள் மூலம் வளர்ப்பவர்கள் மீது தங்களுக்கு இருக்கும் பேரன்பையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துகின்றன நாய்கள்.

பல நூறு ஆண்டுகளாகவே மனிதர்களுக்கும் - நாய்க்கும் இடையிலான பிணைப்பை நாம் கொண்டாடி வருகிறோம். தவிர ஒரு நாய் அதன் உரிமையாளர் மீது கொண்டுள்ள விசுவாசம் பற்றி பல கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் உரிமையாளர் மீதான நாயின் அன்பை எடுத்துக்காட்டும் வகையில் சாலையோரம் ஒரு நாய் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரோட்டோரம் நாய் நடந்து செல்வதற்கும், உரிமையாளர் மீதான விசுவாசத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

அந்த நாய் வெறுமனே ரோட்டோரம் நடந்து செல்லவில்லை வாயில் லஞ்ச் பாக்ஸ் ஒன்றை கவ்வி கொண்டு செல்வது தான் ஹைலைட். ஆம், நாய் ஒன்று லஞ்ச் பாக்ஸுடன் சாலையோரம் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தான் தற்போது வைரலாகி வருகிறது. என்டர்டெயின்மென்ட் நியூஸ் போர்ட்ல்-ஆன பிங்க்வில்லா (Pinkvilla) சமீபத்தில் தனது இன்ஸ்டா பேஜில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் டிபன் பாக்ஸ் ஒன்றை வாயில் சுமந்து செல்லும் அழகிய வீடியோவைப் ஷேர் செய்து உள்ளது. இந்த வீடியோவை ஷேர் செய்து நாய் தனது உரிமையாளரின் அலுவலகத்திற்கு உணவை வழங்குவதற்காக தினசரி 2 கிலோ மீட்டர் நடந்து செல்வதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



 




View this post on Instagram





 

A post shared by Pinkvilla (@pinkvilla)






இந்த வீடியோவை பார்த்து வியக்கும் நெட்டிசன்கள் குறிப்பிட்ட நாயின் செயல் மற்றும் விசுவாசத்தை பாராட்டி வருகின்றனர். இந்த வைரல் வீடியோவில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் டிபன் பாக்ஸை வாயில் வைத்துக்கொண்டு சாலையோரம் நடந்து செல்கிறது. வீடியோவின் பின்னணியைப் பார்த்தால், அந்த வீடியோ மலைப் பகுதியில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. வீடியோவின் கேப்ஷனில் அந்த நாயின் பெயர் ஷெரு (Sheru) என்றும், தினமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து தனது உரிமையாளரின் அலுவலகத்திற்கு சென்று மதிய உணவு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : இந்தியாவில் பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் மர்ம இடம்..!

இந்த வீடியோவில் உள்ள மற்றொரு சுவாரசிய காட்சி என்னவென்றால் சாலையோரம் நடந்து செல்லும் போது வாகனம் ஏதும் சென்றால் பாதுகாப்பிற்காக சட்டென்று Sheru இன்னும் ஓரமாக நகர்ந்து சென்று விடுவதை பார்க்க முடிகிறது. இந்த கியூட் வீடியோ இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் 47 ஆயிரத்திற்கும் அதிகமான் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. . இந்த வீடியோவை பார்த்து கண்ணீரை நிறுத்த முடியவில்லை என ஒரு பெண் கூறியுள்ளார். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் மற்றொரு யூஸர் சாலையில் தனியாக நடந்து செல்லும் அப்பாவி விலங்கை ஆபத்தில் ஆழ்த்தும் நாயின் குடும்பத்தினர் மீது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். எனினும் இந்த வீடியோ பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Dog, Trending, Viral Video

அடுத்த செய்தி