Home /News /trend /

இரண்டு தலை உடைய அரிதான பல்லி - வைரலாகும் வீடியோ

இரண்டு தலை உடைய அரிதான பல்லி - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : ஆஸ்திரேலியா நாட்டில் கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன உயிரியல் பூங்காவில் அரிதான பல்லி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியா நாட்டில் இரண்டு தலை உடைய பல்லி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஊர்வன பூங்கா நிர்வாகத்தினர், சமீபத்தில் பொதுமக்கள் இடையே மிகவும் அரிதான பல்லியை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

    லக்கி என்று பெயரிடப்பட்ட பல்லியைப் பார்த்து பூங்காவில் உள்ள ஊழியர்கள் அதிர்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர். இப்போது பல்லியானது ஊர்வன பூங்காவில் நிபுணர்களிடமிருந்து சிறந்த கவனிப்பைப் பெறுகிறது. இது குறித்து பூங்காவின் ஊர்வன பிரிவு தலைவர் டேனியல் ரம்சே கூறுகையில், நாங்கள் லக்கியை சிறப்பாக நடத்தி வருகின்றோம்.

    பல்லி காடுகளில் நீண்ட காலம் வாழும். எனினும் இத்தகைய அரிதான குறைபாடுள்ள விலங்குகள் உணவு உண்ணும் போது சிரமம் ஏற்படுகின்றது. மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இயலாமை காரணமாக உயிர்வாழ்வதில்லை என்று பூங்கா தெரிவித்துள்ளது.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Jay Brewer (@jayprehistoricpets)






     

    இந்த வீடியோவை கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன உயிரியல் பூங்காவின் நிறுவனர் ஜே ப்ரூவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை மொத்தம் 68,392 பேர் லைக் செய்துள்ளனர். இது குறித்து தலைப்பில் “ஆஹா நம்பமுடியவில்லை. உங்களால் நம்ப முடியுமா, ” என குறிப்பிட்டுள்ளார் .
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி