Home /News /trend /

‘நச்சுன்னு ஒரு கிஸ்’... பியர் கிரில்ஸை திக்குமுக்காட வைத்த ரன்வீர் சிங்... வைரல் வீடியோ!

‘நச்சுன்னு ஒரு கிஸ்’... பியர் கிரில்ஸை திக்குமுக்காட வைத்த ரன்வீர் சிங்... வைரல் வீடியோ!

ranveer singh

ranveer singh

Ranveer Singh with Bear Grylls | பியர் கிரில்ஸின் சாகசப் பயணத்தில் பாலிவுட் பிரபலமான ரன்வீர் சிங் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியானது Exclusive ஆக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகியுள்ளது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்றது. இதில் காடுகள், மலைகள், பாலைவனங்கள், சதுப்பு நில பகுதிகள் என மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் சிக்கி கொண்டவர்கள் எப்படி உயிர் பிழைக்க போராட வேண்டும், பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற வேண்டும் போன்ற குறிப்புகளை பியர் கிரில்ஸ் கற்றுக்கொடுக்கிறார். இந்நிகழ்ச்சியில் அவ்வப்போது உலகப்புகழ் பெற்ற பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்கி கவுசால், அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

தற்போது பியர் கிரில்ஸின் சாகசப் பயணத்தில் பாலிவுட் பிரபலமான ரன்வீர் சிங் பங்கேற்றுள்ளார். 2010ம் ஆண்டு ‘பேண்ட் சர்மா பாராத்’ என்ற படம் மூலமாக இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்த ரன்வீர் சிங், தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி Exclusive ஆக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகியுள்ளது.

ஜூலை 9ம் தேதி நிகழ்ச்சியை கண்டு ரசித்த ரசிகர்களுக்கு ரன்வீர் நன்றி தெரிவித்தார். அந்த உரையில் "இது மிகவும் அருமையாக இருந்தது என்று நான் தனிப்பட்ட முறையில் நினைத்தேன். ஆனால் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம், இது எனக்கு ஒரு பரிசோதனையாக இருந்தது. அது வேலை செய்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது வேலையை நன்றாக செய்ததாக உணருகிறேன்” எனத் தெரிவித்தார்.



அதேபோல் 'ஜங்கிள் கிங்' பியர் கிரில்ஸுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, ​​"எனது முதல் எண்ணம் என்னவென்றால், நான் இதுவரை பயணம் செய்யாத காட்டிற்குச் செல்வது எவ்வளவு அருமையாக இருக்கும் என்பதுதான். அதற்காக நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். காடுகளின் ராஜா பியர் கிரில்ஸ். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. பியர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற வாய்ப்பில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

Also Read : இந்த ஃபிரெஞ்ச் ஃபிரைஸின் விலையை கேட்டால் அதை சாப்பிடும் ஆசையே உங்களுக்கு வராது

இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானதில் இருந்தே ரன்வீர் சிங் பற்றிய மீம்ஸ் மற்றும் கமெண்ட்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. தற்போது ரன்வீர் சிங், பியர் கிரில்ஸ் கன்னத்தில் சரமாரியாக பலமுறை முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ரன்வீர் கொடுத்த முத்தத்தால் பியர் கிரில்ஸ் நிலைகுலைந்து போகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கிண்டல், கேலி செய்து வருகிறார்கள்.



நெட்டிசன்களில் ஒருவர் 'பாஜிராவ் மஸ்தானி' பட நட்சத்திரத்தின் நடத்தை எல்லை தாண்டி செல்கிறது என விமர்சித்துள்ளார். அதேபோல் மற்றொரு நெட்டிசன் ‘தனிப்பட்ட இடம் என்பது எவ்வளவு மீறப்பட்டுள்ளது’ என சகட்டு மேனிக்கு கமெண்ட்களை வாரிக்கொட்டி வருகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Man vs Wild, Ranveer singh, Trending, Viral Video

அடுத்த செய்தி