ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

Fact Check : ரிஷி சுனக் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்? வைரல் வீடியோ ஃபேக்ட் செக்..

Fact Check : ரிஷி சுனக் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்? வைரல் வீடியோ ஃபேக்ட் செக்..

வைரலான வீடியோ

வைரலான வீடியோ

பிரிட்டன் நாட்டு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது எனவும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ எனவும் பகிரப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaWaterlooWaterloo

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சார்பில் பொங்கல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தை சேர்ந்த சிலர் வாழை இலையில் விருந்து உண்பதுபோல் வெளியான வீடியோ பொய் எனவும் அது கனடா நாட்டில் எடுக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. 

அலுவலகம் ஒன்றில் வெளிநாட்டவர்கள் சிலர், வாழை இலையில் விருந்து உண்பதுபோல் வீடியோ ஒன்று வைரலானது. அது பிரிட்டன் நாட்டு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது எனவும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ எனவும் பகிரப்பட்டது.

இந்த வீடியோ இங்கிலாந்து நாட்டில் எடுக்கப்படவில்லை, கனடா நாட்டின் வாட்டர்லூ நகரில் எடுக்கப்பட்டது. தமிழ் கலாச்சார சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற விருந்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. இதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அந்த அமைப்பு வாட்டர்லூவின் மேயர், கவுன்சிலர்கள், காவல்துறையினர் மற்றும் பணியாளர்களுடன் பொங்கல் விருந்து என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வீடியோவை எடுத்து தனியே பகிர்ந்த சிலர், இது பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது எனவும் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் ஏற்பாடு செய்த விருந்து எனவும் குறிப்பிட்டனர். இதனை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்திருந்தனர். மாநிலங்களவை உறுப்பினர் சோனால் மன்சிங் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் உண்மைதன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Canada, Pongal 2023, Rishi Sunak