• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வாயில் இருந்து வரும் பெரிய சிலந்தி ... வைரலாகும் இணையவாசிகளிடையே பயத்தை ஏற்படுத்திய வீடியோ

வாயில் இருந்து வரும் பெரிய சிலந்தி ... வைரலாகும் இணையவாசிகளிடையே பயத்தை ஏற்படுத்திய வீடியோ

வாயில் இருந்து வரும் பெரிய சிலந்தி

வாயில் இருந்து வரும் பெரிய சிலந்தி

Viral Video of Spider : ஜெய் ப்ரூவர் தனது வாயில் ஒரு பெரிய கருநிறத்தில் ஆன சிலந்தி ஒன்றை வாயில் இருந்து எடுக்கின்றார். பார்ப்பதற்கே பயமாக உள்ள இந்த வீடியோவை ஜெய் ப்ரூவர் அசால்ட்டாக செய்து முடிக்கின்றார்.

  • Share this:
    கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன மிருகக்காட்சிசாலையின் நிறுவனர் ஜெய் ப்ரூவர், இவர் தனது வாயில் இருந்து பெரிய சிலந்தி ஒன்றை எடுக்கும் படி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ பலரின் கவனம் பெற்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ஜெய் ப்ரூவர் தனது வாயில் ஒரு பெரிய கருநிறத்தில் ஆன சிலந்தி ஒன்றை வாயில் இருந்து எடுக்கின்றார். பார்ப்பதற்கே பயமாக உள்ள இந்த வீடியோவை ஜெய் ப்ரூவர் அசால்ட்டாக செய்து முடிக்கின்றார்.

    இவர் இது போன்று பல வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் , யூடியூப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இதற்க்கு முன்னதாக அவர் பகிர்ந்த வானவில் நிற பாம்பு பலரின் கவனம் பெற்றது. பார்ப்பதற்கு மேற்பட்ட வண்ணத்தில் உள்ள இந்த பாம்பு இணையவாசிகள் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.



    ஜெய் ப்ரூவர் இதுபோன்ற நம்பமுடியாத வீடியோக்கள் பலவற்றை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஷேர் செய்து வருகிறார். தற்போது வரை சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியாவை பார்வையிட்டுள்ளனர்.பாம்பின் நம்பமுடியாத நிறத்தைப் பற்றி நெட்டிசன்கள் தங்களது பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    ஊர்வன மிருகக்காட்சிசாலையில் உள்ள பாம்புகளில் இந்த பாம்பு மிகவும் அழகாக இருப்பதால் இதற்கு மை லவ் என பெரியரிட்டதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



    50 ஆண்டுகளில் முதல் முறையாக வானவில் பாம்பு அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.



    இந்த வகையான பாம்பு கடைசியாக 1969-ல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள், தீங்கு விளைவிக்காதவை என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.



    இது மட்டும் அல்லது பாம்புகள் , முதலைகள் முட்டையிடும் வீடியோக்கள் பலவற்றை இவர் தனது யூடியூப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: