சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் பாதித்து விட்டது. இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக நீட்டித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதால், மீண்டும் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சமூக வலைத்தளங்களில் மக்கள் பலர் மீண்டும் தங்கள் செல்லப்பிராணிகளைப் பற்றியும், செல்லப்பிராணி பராமரிப்பு பற்றியும் மனதைக் கவரும் பதிவுகளை ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் பல மாநில அரசுகள் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளைக் கட்டுப்படுத்த அதிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். சில இடங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் என நாள்தோறும் புதிய அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஒருவர் தனது நாய்க்கு முக கவசம் அணிந்து அழைத்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Also read... நியூ மெக்ஸிகோவில் 300 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த 'காட்ஸில்லா' சுறாவின் புதைபடிவம் கண்டுபிடிப்பு!
இன்ஸ்டாகிராமில் வெளிவந்த இந்த வீடியோவில், ஒரு வயதான மனிதர் தனது
நாயை தோளில் சுமந்து செல்வதைக் காணலாம். அவர் நாயின் முகத்தில் முக கவசம் அணிந்திருந்தாலும், அவர் முக கவசம் அணியாமல் உள்ளார். இதனை பார்த்த ஒரு நபர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்தவாறு, இதுகுறித்து விசாரிப்பது அந்த வீடியோவில் தெரிகிறது. அதில், உங்கள் நாய்க்கு முக கவசம் அணித்திருக்கிறீர்கள், ஏன் நீங்கள் அணியவில்லை? என கேட்கிறார். அதற்கு அந்த நபரோ, இந்தியில், “இது என் குழந்தை, எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, ஆனால் எந்தவொரு பாதிப்பும் எனது நாய்க்கு வருவதை நான் விரும்பவில்லை ”என உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார். மேலும் “நான் இறந்தாலும், என் நாய் இறக்க அனுமதிக்க மாட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ள நிலையில் பலரது மனதையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி வந்தாலும் முக கவசம் அணிந்து உலா வந்த நாய் இது முதல் அல்ல, கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஈக்வடாரில் உள்ள அம்பாடோவில் ஒரு சிறுவன் தனது செல்ல நாய்க்கு முக கவசம் அணிவித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் மனதை கவர்ந்தது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.