முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / என் பையன் தான் படத்துல அசிஸ்ட்டண்ட் டைரக்டர் - பெருமிதம் கொள்ளும் தாயின் நெகிழ்ச்சி வீடியோ!

என் பையன் தான் படத்துல அசிஸ்ட்டண்ட் டைரக்டர் - பெருமிதம் கொள்ளும் தாயின் நெகிழ்ச்சி வீடியோ!

துணை இயக்குநர் இளா ஸ்டாலின்

துணை இயக்குநர் இளா ஸ்டாலின்

படத்தின் துணை இயக்குநர் இளா ஸ்டாலின் என்பவர் தனது தாயாருடன் படம் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கடந்த மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படம் குறித்து வாக்ஸ் பாக் என மக்கள் கருத்தை கேட்க யூட்யூப் சேனல்கள் வரிசைகட்டி நிற்பது வழக்கமான ஒரு நிகழ்வு.

அவ்வாறு மக்கள் கருத்தை கேட்கும் பொழுது, படத்தின் துணை இயக்குநர் இளா ஸ்டாலின் என்பவர் தனது தாயாருடன் படம் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அவரிடம் ஒருவர் படம் குறித்து கருத்து கேட்கிறார். அருகில் இருந்த அவரது தாயார், மகிழ்ச்சியில் ‘என் பையன் தான் படத்துல அசிஸ்ட்டண்ட் டைரக்டர்’ பெருமிதம் கொள்கிறார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து தங்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் தனது மகனை பற்றி பெருமை கொள்ளும் அந்த தாயின் புன்னகைக்கு இந்த உலகில் ஈடுஇணை இல்லை என பலர் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Director, Pa. ranjith, Tamil cinema news