சப்பாத்தி தயாரிக்கும் போது மாவில் எச்சில் துப்பிய நபர் - திருமண நிகழ்ச்சியில் அதிர வைத்த வாலிபரின் செயலால் அதிர்ச்சி: வைரல் வீடியோ!

வைரல் வீடியோ!

வைரலாக பரவி வரும் வீடியோவில் சப்பாத்தில் எச்சியில் துப்பிய வாலிபரை பர்தாபூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரின் பெயர் நவுஷத், இவர் மீரட் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது,

  • Share this:
திருமண நிகழ்ச்சியில் சப்பாத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கேட்டரிங் நபர் ஒருவர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் அண்மையில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது. அதன்படி திருமண நிகழ்ச்சி ஒன்றில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் சப்பாத்தி மாவை தயார் செய்து வருகிறார். இவர் சப்பாத்தி மாவை உருட்டிக்கொண்டிருக்கும் போது, யாரும் பார்க்காத நேரத்தில் அதன் நடுவில் எச்சில் துப்புகிறார். இதனை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் காவல்துறையினர், மீடியா, சமூக அமைப்புகளின் ட்விட்டர் கணக்குகளையும் டேக் செய்திருந்தார்.

பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தவர்கள் அந்த வாலிபரின் செயலை கடுமையாக சாடினர். அதே நேரத்தில் சௌஉக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் உத்தரப் பிரதேச காவல்துறையினரின் கவனத்திற்கும்

இந்நிலையில் இந்து ஜக்ரான் மன்ச் என்ற அமைப்பின் மீரட் பகுதி தலைவர் சச்சின் சிரோகி என்பவர் இந்த வைரல் வீடியோவில் உள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி விசாரித்தனர். இதனடிப்படையில் வைரலாக பரவி வரும் வீடியோவில் சப்பாத்தில் எச்சியில் துப்பிய வாலிபரை பர்தாபூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரின் பெயர் நவுஷத், இவர் மீரட் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது,

வாலிபர் நவுஷத்திற்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் அதன் முடிவுகள் அடிப்படையில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என வந்தால், கொரோனா பரப்பியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.இதனிடையே சமூக வலைத்தளத்தில் பரவும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வாலிபர் வீடியோவில் எச்சில் துப்புவது போல தோன்றவில்லை, ஆனாலும் அவர் சப்பாத்தி தயாரிக்கும் போது எதற்காக அவ்வளவு அருகில் செல்ல வேண்டும் என்று தான் புரியவில்லை. தவறு இருக்கும் பட்சத்தில் வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் உணவு உட்கொள்வார்கள், இது போன்ற பொறுப்பற்ற செயல்கள் பிறருக்கு தீங்காக அமைந்து விடும். வெளி இடங்களுக்கு செல்லும் போது உணவு எடுத்துக் கொள்வதையே அச்சத்துக்குள்ளாக்கும் வகையில் அமைந்துவிட்டதாக வைரல் வீடியோ குறித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Published by:Arun
First published: