• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • மனிதரும், பறவையும் ஒரே தட்டில் சாப்பிட்டதை பாராட்டிய நெட்டிசன்கள்-வைரல் வீடியோ

மனிதரும், பறவையும் ஒரே தட்டில் சாப்பிட்டதை பாராட்டிய நெட்டிசன்கள்-வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

மனிதரும், பறவையும் ஒரே தட்டில் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது.

 • Share this:
  சமீபத்தில் மேகராஜ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் மேகராஜின் தந்தை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அவர் காய்கறி கூட்டு, சாதம், பருப்பு ஆகியவற்றை சாப்பிட, அருகே பறவை ஒன்றும் அவரது பிளேட்டில் இருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறது. அவரும் சாப்பாட்டில் கொஞ்சம் பறவைக்கும் எடுத்து வைத்து சாப்பிடுகிறார்.

  அந்த பதிவில் எனது அப்பா, விலங்குகளையும், பறவைகளையும் நேசிப்பவர். அவரை நினைத்து தனக்கு பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக மனிதர்கள் தங்கள் தேவைக்காக விலங்குகள், பறவைகளை துன்புறுத்தும்போது அந்த மனிதரின் செயல் இன்ஸ்பிரேஷனாக உள்ளது என நெட்டிஷன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ 2 லட்சம் லைக்குகளை பெற்றிருக்கிறது.

  மேகராஜ் பகிர்ந்த மற்றொரு பதிவில் காட்டுப்பகுதியில் மஞ்சள் வண்ணத் துணியால் மூடப்பட்ட ஒரு பறவைக் கூண்டு உள்ளது. அந்த கூண்டைத் திறந்து பறவைகளை வெளியே பறக்க விடுகிறார். இந்த வீடியோவும் விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அவருக்கு இருக்கும் நேசத்தை காட்டுவதாக இருந்தது. இந்த வீடியோவால் இன்ஸ்டாகிராம் யூசர்கள் மத்தியில் அவருக்கு மதிப்பு அதிகரித்தது.   
  View this post on Instagram

   

  A post shared by megharaj Desale. (@desalemegharaj)


  AlsoRead :7,500 காயின்களை பயன்படுத்தி 9 மணி நேரத்தில் கிச்சனை மாடர்னாக்கிய பெண் - பாராட்டும் நெட்டிசன்கள்!

  இந்த அவசர உலகில் நாம் அனைவரும் சுயநலமிக்கவர்களா மாறிவிட்டோம். பெற்றோர்களைக் கூட முதியோர் இல்லங்களில் விட்டு விடும் சூழல் தான் தற்போதைய யதார்த்தம். இந்த சூழலில் பறவைகள், விலங்குகளின் நிலைமையை யோசித்து கூட பார்க்க முடியாது.

  நமது வீடுகளில் பறவைகளுக்கு உணவும் நீரும் வைப்போம். சிலர் தெரு நாய்கள், பூனை ஆகியவற்றிற்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதை பார்க்க முடியும். ஆனால் இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் காரணமாக பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவுகள் கிடைக்காமல் இருந்தன.

  AlsoRead : ஒரே நாளில் 4 லட்சத்திற்கும் மேலான கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன

  இருப்பினும் ஒரு சிலர் சேவை மனப்பான்மையுடன் தெரு நாய்கள் உள்ளிட்டவற்றிற்கு உணவு வழங்கினர். அவர்களது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இதுபோன்ற செயல்களால் தான் மனிதம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.

  சத்தியமங்கலம் அருகே ராமலிங்கம் என்ற முதியவர் ஒருவர் கடந்த சில வருடங்களாக அப்பகுதியில் திரியும் குரங்குகளுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் மீது குரங்குகள் ஏறிக் குதித்து ஜாலியாக விளையாடும் காட்சிகள் இணையதளங்களில் வைரலானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் அவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தினமும் அவரிடம் உணவுகள் வாங்கி சாப்பிடும் குரங்குகள், அவர் இறந்தது தெரியாமல் தினமும் அவரை எதிர்பார்த்து வந்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனவாம். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேகராஜின் தந்தை, ராமலிங்கம் போன்றவர்கள் இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களுக்கானதும் என்று உறக்கச் சொல்கின்றனர்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: