தொலைந்துபோன ஆட்டுக்குட்டி தாயுடன் மீண்டும் இணையும் நெகிழவைக்கும் காட்சி..! (வைரல் வீடியோ)

கடைசியாக அந்த குட்டி ம்மே என்று  கத்துவதை கேட்கும்போது உற்சாகம் மற்றும் ஒருவிதமான உணர்வை உணர்ந்தேன்" என்று பதிவிட்டுள்ளார் ஒரு பதிவர்.

தொலைந்துபோன ஆட்டுக்குட்டி தாயுடன் மீண்டும் இணையும் நெகிழவைக்கும் காட்சி..! (வைரல் வீடியோ)
வைரல் வீடியோ
  • News18 Tamil
  • Last Updated: September 13, 2020, 1:26 PM IST
  • Share this:
பெற்றோரிடமிருந்து தொலைந்து போவது என்பது எல்லா உயிரினத்திற்கும் மோசமான ஒன்று தான். சமீபத்தில் ஒரு ஆட்டுக்குட்டி தொலைந்து போன சில நாட்களுக்கு பின்னர் தனது தாயுடன் மீண்டும் ஒன்றிணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'Aww' பக்கத்தில் 'kdearceo' என்ற பெயரில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வெளியான சற்று நேரத்திலேயே வைரலாகி விட்டது. இதுவரை 1.2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 1,300-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.

இணையத்தில் வெளியான அந்த வீடியோவின் தலைப்பில், "நேற்று ஒரு ஆட்டுக்குட்டி ஒரு குழியில் சிக்கி  இருப்பதை கண்டோம். அதை கவனித்து நாங்கள் ஒரே இரவில் அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க முடிவு செய்தோம், ஆனால் அதனால் பயனில்லை" என்று பதிவிட்டுள்ளார்.


இருப்பினும் அவர்கள் அந்த ஆட்டுக்குட்டியின் தலை மேல் உள்ள வெள்ளை ரோமங்களைக் கொண்ட ஆடுகளின் குழுவை கண்டுபிடித்து, எல்லா ஆடுகளுக்கு முன்னால் இந்த ஆட்டுக்குட்டியை தரையில் வைத்து அந்த குட்டியின் தாயைக் கண்டுபிடித்துள்ளனர்.
We found a kid goat trapped in a pit yesterday. Took care of it overnight and decided to find the owner but to no avail. Instead, we found a group of goats with the same white fur on top of their heads so we tried to put him on the ground. Ninja chopping onions moment from r/aww

இதை "நிஞ்ஜா ஜாப்பிங் ஆனியன் மொமன்ட்" என்றும் விவரித்துள்ளனர். மேலும் இந்த பதிவை பகிர்ந்த ஏராளமானோர் இதயத்தை உருக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். ஒருவர், என் அம்மா ஒரு கால்நடை மருத்துவர், ஆகையால் அவர் சொல்வார் "விலங்குகளால் உண்மையில் நன்றி சொல்ல முடியாது" என்று, ஆனால் நம்மால் முடியும். இதற்கு நன்றி, நன்றி என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நபர், "முதலில் நான் அந்த வீடியோவின் சத்தமில்லாமல் பார்த்தேன், அழகாய் இருந்தது. பிறகு அக்காட்சியை சத்தத்துடன் மீண்டும் பார்த்தபோது நான் வெம்பி அழுதுவிட்டேன். ஏனென்றால் கடைசியாக அந்த குட்டி ம்ம்ம்மே.... என்று  கத்துவதை கேட்கும்போது உற்சாகம் மற்றும் ஒருவிதமான உணர்வை உணர்ந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.
First published: September 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading