Viral Video : ப்ரைரி நாய்யை கையில் வைத்து தாலாட்டும் சிறுமி - வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

ப்ரேரி நாய் என்பது ஒரு கொறித்துண்ணி வகையை சார்ந்தது. அதனை கையில் எடுத்து குழந்தை போல பாட்டு பாடி மகிழும் சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

  • Share this:
பெரும்பாலும்அழகான குழந்தைகள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் விளையாடும் வகையிலான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டால் வைரலாவது வழக்கம். அந்த வரிசையில் சமீபத்தில் ஒரு சிறுமி தனது ப்ரேரி நாய்யுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

ப்ரேரி நாய் என்பது ஒரு கொறித்துண்ணி வகையை சார்ந்தது. பார்க்க பெரிய எலி போல தோற்றம் அளித்தாலும் இது நாய்களை போல சத்தம் எழுப்பும். இதன் நகங்கள் கூர்மையாக காணப்படும். பசுமையான மற்றும் குளிர்ந்த இடங்களில் இது வசிக்கும். கேரட், புற்கள் போன்ற இயற்கை சார்ந்த உணவுகளை விரும்பி சாப்பிடும். அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு இடையேயான பெரிய சமவெளிகளில் காணப்படும் இயற்கை, புல்வெளி பகுதிகளில் ப்ரைரி நாய்கள் அதிகம் வாழ்கின்றன.

https://twitter.com/buitengebieden_/status/1390352799202213895?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1399035279202213895%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2Fbuitengebieden_2Fstatus2F1399035279202213895widget%3DTweet

இந்த நிலையில் ப்ரைரி நாய் ஒன்றை ஒரு சிறுமி கொஞ்சும் வீடியோ தான் இப்பொது ட்ரெண்டிங். அந்த சிறுமி ப்ரைரி நாய்யை ஒரு குழந்தை போல கையில் வைத்து ஒரு பாடலை பாடி கொண்டிருக்கிறார். சிறுமியின் அழகிய சைகை அந்த உயிரினத்தின் மீதான தூய அன்பை வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த காட்சிகள் பார்க்க கியூட்டாக இருப்பதால் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ALSO READ | "குழந்தைகளுக்கு இவ்வளவு வேலை கொடுப்பது ஏன்?" ஆன்லைன் கிளாஸ் குறித்து பிரதமருக்கு புகார் அளித்த 6 வயது சிறுமி!

இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் மற்றும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று வைரலாகிவிட்டது. ஆனாலும் ப்ரேரி நாய்யுடன் சிறுமி பாடும் வீடியோ பலரை கவலையடையச் செய்துள்ளது. சில யூசர்கள் அந்த கொறித்துண்ணியாய் சிறுமி கையில் வைத்திருப்பது அவளுக்கு ஆபத்தானது என்று சுட்டிக்காட்டினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் எண்ணற்ற நெகடிவ் கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது. அதில் பலரும் அந்த இளம் பெண் குறித்த தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ALSO READ | திருமணத்தின் போது இறந்த மணப்பெண் - சோகத்தில் பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மணமகன்!

ஒரு யூசர் கொறித்துண்ணியின் பெரிய நகங்கள் மோசமான பற்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். கொறித்துண்ணி அழகாகத் தெரிந்தாலும், அது சிறுமிக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

 

  

  

OMG , அந்த சிறுமி பயங்கரமான கொறித்துண்ணியாய் கையில் வைத்துள்ளார். இது பார்க்க "அழகாக" தோன்றலாம், ஆனால் அவை ஒரு காட்டு விலங்கு என்பதால் கவனம் வேண்டும் என்றும் ஒருவரும் அதன் நகங்களை பாருங்கள், ​​இது ஒரு காட்டு விலங்கு, இது ஒரு நொடியில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தக்கூடும், கொறித்துண்ணிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை அறுவை சிகிச்சை நிபுணர்களால் கூட சரிசெய்ய முடியாது என்று மற்றொரு யூசரும் குறிப்பிட்டுள்ளனர்.

  

  

இருப்பினும், புல்வெளி வளரும் இந்த நாய்கள் முற்றிலும் பழக இனிமையானவை, என்றும் அவற்றுடன் விளையாடும்போது எந்த ஆபத்தும் இல்லை என்றும் சில கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: