ஆண்களுக்கே டஃப் கொடுக்கும் "பாடிபில்டர் கங்காரு" - வைரலாகும் வீடியோ!

பாடிபில்டர் கங்காரு

ஆஸ்திரேலியாவில் காணப்படும் கங்காருக்களை விட பெரிய உடலை இந்த கங்காரு கொண்டிருக்கிறது.

  • Share this:
உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைக்க அனைவரும் விரும்புவர். மேலும் சிலர் உடல் எடையை பராமரிக்க ஜிம்முக்கு செல்ல வேண்டும் என திட்டங்களையும் தீட்டுவர். ஆனால், இறுதியில் உடற்பயிற்சி செய்யும் திட்டத்தை தள்ளிபோட்டுக்கொண்டே போவர். அப்படிப்பட்டவர்கள் இந்த வீடியோவை காட்டாயம் பார்க்க வேண்டும். தினசரி வொர்க்அவுட்டையும் சில உடல் செயல்பாடுகளையும் செய்ய உங்களுக்கு ஏதேனும் உத்வேகம் தேவைப்பட்டால், உங்களுக்கான சரியான வீடியோவை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.

டெக்ஸாஸ் பகுதியில் உள்ள ஒரு கங்காருவின் இந்த வைரல் கிளிப் நிச்சயமாக உங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு ஊக்கத்தை உங்களுக்கு தரலாம். சரி, ஒர்க்அவுட் உத்வேகத்திற்கும் கங்காருவுக்கும் என்ன தொடர்பு என்று தானே யோசிக்கிறீர்கள்?. சமீபத்தில் ஜெய் ப்ரூவர் என்ற இன்ஸ்டா யூசர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ‘பாடிபில்டர்’ கங்காருவின் வீடியோ கிளிப்பை வெளியிட்டு நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப்ரூவர் ஒரு கங்காருவை வளர்த்து வருகிறார். உடற்பயிற்சிகளுக்காக ஜிம்மிற்கு தவறாமல் செல்லும் ஒரு மனிதனைப் போலவே, கட்டுமஸ்தான் உடலைக் அந்த கங்காரு கொண்டிருக்கிறது. மேலும், பகிரப்பட்ட அந்த வீடியோவுடன், "இந்த கங்காரு அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தது என்றும், ஆஸ்திரேலியாவில் காணப்படும் கங்காருக்களை விட பெரிய உடலை இந்த கங்காரு கொண்டிருக்கிறது" என்று ப்ரூவர் கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில் ப்ரூவராய் அந்த கங்காரு கட்டியணைப்பதை காணலாம். 
View this post on Instagram

 

A post shared by Jay Brewer (@jayprehistoricpets)


கடந்த மே 28ம் தேதி அன்று பகிரப்பட்ட இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இப்போது 3.5 லட்சத்துக்கு மேல் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது. மேலும் யூசர்கள் கங்காருவின் உடலமைப்பைப் போற்றுவதன் மூலம் பதிவின் கமெண்ட் செக்சனை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளனர். அதில் ஒரு இன்ஸ்டா யூசர் கமெண்ட் செய்திருந்தாவது, "அந்த கங்காருவை பார்த்த பிறகு எனக்கும் சில புஷ்-அப்களை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கங்காருவின் உடலமைப்பைப் பாராட்டி மற்றொரு இன்ஸ்டா யூசர் குறிப்பிட்டிருப்பதாவது, "இந்த கங்காருவின் ஒரு உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தை வெளியிட வேண்டும். இன்றே நானும் அதை வாங்குவேன்" என்று குறிப்பிட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு பாடிபில்டர் கங்காருவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இதுதொடர்பாக தனியார் பத்திரிக்கையில் வெளியான தகவலின்படி, பூட்ஜிடப் க்ரீக் என்னும் பகுதியில் ஒரு இளைஞர் தனது நாயுடன் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு கட்டுமஸ்தான உடலமைப்பில் ஒரு கங்காரு நிற்பதைக் கண்டார்.

Also read... விர்ச்சுவல் நிகழ்ச்சி மூலம் ரூ.37 லட்சம் கொரோனா நிவாரணம் திரட்டிய டெல்லி இசைக்கலைஞர்கள்!

இதுபோன்ற நல்ல உடலமைப்பை கொண்ட கங்காருவைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர், அதனை புகைப்படம் எடுக்க விரும்பி தனது கேமராவை எடுக்க ஓடினார். அதேசமயம் அந்த பாலூட்டி அந்த இளைஞரை நோக்கி ஓடி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞர் கங்காருவை புகைப்படம் எடுத்துக்கொண்டு வெளியேறினார். கங்காருவின் கட்டமைப்பை பற்றி விவரித்த அந்த இளைஞர், அது 6.5 அடி உயரமும், குறைந்தது 100 கிலோ எடையுள்ளதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: