Home /News /trend /

பேரனுக்காக தாத்தா செய்த செயல்... மனதை நெகிழ வைக்கும் வீடியோ

பேரனுக்காக தாத்தா செய்த செயல்... மனதை நெகிழ வைக்கும் வீடியோ

42 வருடங்களுக்குப் பிறகு திரையரங்கிற்குச் சென்ற தாத்தா

42 வருடங்களுக்குப் பிறகு திரையரங்கிற்குச் சென்ற தாத்தா

கிட்டத்தட்ட 42 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய பேரனுடன் திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சென்ற முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போர் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தாத்தா பாட்டி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. என்னதான் நாம் வளர்ந்து விட்டாலும், அவர்களுக்கு நாம் எப்போதுமே குழந்தைகள் தானே. அவர்கள் நம் மீது காட்டும் அக்கறையாகட்டும், அன்பாகட்டும் எப்பொழுதுமே அதில் ஒரு தனித்துவம் நிறைந்து காணப்படும். ஒரு குடும்பத்தில் பேரக் குழந்தைகளுக்கும், தாத்தா பாட்டிகளுக்கும் இடையில் உள்ள உறவே பார்ப்பதற்கு மிக அழகாகவும், யாராலும் மறக்க முடியாத ஒன்றாகவும் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் 42 வருடங்களுக்குப் பிறகு திரையரங்கிற்குப் படம் பார்க்க வந்த தன்னுடைய தாத்தாவின் வீடியோவை ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    காண்பவர் உள்ளத்தை நெகிழ்ச்சியடையச் செய்யும் அந்த வீடியோவானது தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆகஸ்ட் 11 ம் தேதி வெளியான “ரக்ஷா பந்தன்” என்னும் திரைப்படத்தைக் காண அவர் தன்னுடைய பேரனுடன் சென்றதாகத் தெரிகிறது. ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்பட்ட இந்த வீடியோவானது டாக்டர் தீபக் அஞ்சனா என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தன்னுடைய தாத்தா கடைசியாக 1980 ஆண்டு தான்’ திரையரங்கிற்குச் சென்றார் எனவும், அதன் பிறகு 42 வருடங்கள் கழித்து தற்பொழுது தான் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்க வந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    தலையில் வெள்ளை தலைப்பாகையுடன் பாரம்பரிய முறையில் உடை உடுத்தி உள்ள அந்த முதியவர் தியேட்டரில் உள்ள எஸ்கலேட்டரில் ஏறி திரையரங்க வளாகத்திற்குள் செல்லும் வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அக்ஷய் குமார் மற்றும் பூமி பெட்னேக்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள ரக்ஷா பந்தன் என்னும் திரைப்படத்தை அந்த முதியவர் கண்டு களித்துள்ளார்.




    அந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரை 6 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 55 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் அள்ளி உள்ளது. அந்த திரைப்படத்தில் நடித்த சாதியா கத்தீப் என்னும் நடிகர் “உங்கள் தாத்தாவிற்கு என்னுடைய முழு அன்பையும் தெரிவியுங்கள்” என்று மகிழ்ச்சியுடன் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து அதனுடன் “ஹார்ட்” எமோஜி-யையும் சேர்த்துள்ளார்.

    Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்தால் நீங்கள் தான் ரியல் ஜீனியஸ்!

    “வாழ்க்கையிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த தருணம்” என்று ஒருவரும் அவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று மற்றொருவரும் பதிவு செய்துள்ளார். “பார்ப்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது” என்று மற்றுமொருவர் பதிவு செய்துள்ளார். இவ்வாறு பலதரப்பட்ட பாசிட்டிவான கருத்துக்களை நெட்டிசன்களிடமிருந்து இந்த வீடியோ பெற்றுள்ளது.

     
    Published by:Janvi
    First published:

    Tags: Cinema, Raksha Bandhan, Viral Video

    அடுத்த செய்தி