ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ரயில் தண்டவாளங்களை கடக்க முடியாமல் தவித்த யானைகள் - துரிதமாக வழி ஏற்படுத்திக் கொடுத்த ரயில்வேதுறை

ரயில் தண்டவாளங்களை கடக்க முடியாமல் தவித்த யானைகள் - துரிதமாக வழி ஏற்படுத்திக் கொடுத்த ரயில்வேதுறை

Elephants

Elephants

Elephants | வனப்பகுதிக்குள் நுழைய முயற்சித்த போது தடுப்புச் சுவர்கள் யானைகளுக்கு தடைகளாக அமைந்தன. இதனால் பொறுமையாக, மிகுந்த சிரமங்களுக்கு இடையே யானைகள் தடுப்பு சுவர்களை கடந்து செல்ல வேண்டியிருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாமல் யானைகள் கூட்டம் தவித்து கொண்டிருந்த காட்சி நமது நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.

யானைகள் சுதந்திரமாக சென்று வருவதற்கான வழித்தடங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை குறித்து இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது. சாலைகள் அல்லது ரயில் தண்டவாளங்களை ஒட்டி விபத்து ஏற்படாமல் தடுக்கவும், விலங்குகள் குறுக்கே வந்து விடாமல் இருக்கவும் தடுப்புகள் அமைக்கப்படுவது வழக்கம்.

குன்னூர் அருகே உள்ள ஹில்குரோவ் மற்றும் ரன்னிமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளங்களை ஒட்டி இதுபோன்ற தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் ஒரு குட்டி மற்றும் 9 யானைகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் நுழைய முயற்சித்த போது தடுப்புச் சுவர்கள் யானைகளுக்கு தடைகளாக அமைந்தன.

இதனால் பொறுமையாக, மிகுந்த சிரமங்களுக்கு இடையே யானைகள் தடுப்பு சுவர்களை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்பகுதியில், நின்று கொண்டிருந்த ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். நல்லவேளையாக அப்போது அவ்வழியாக எந்த ரயிலும் வராததால் யானைகள் பாதுகாப்பாக கடக்க முடிந்தது.

அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. குறிப்பாக, ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், நாடெங்கிலும் உள்ள அனைத்து உள்கட்டுமான வசதிகளிலும் வனவிலங்குகளுக்கு ஆபத்து இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

இதேபோன்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வந்த நிலையில், அது குறித்த தகவல் ரயில்வே நிர்வாகத்தின் காதுகளுக்கும் எட்டியது. சற்றும் தாமதிக்காமல், ரயில்வே நிர்வாகம் இயந்திரங்களைக் கொண்டு தடுப்புச் சுவர்களில் சிறிய பகுதியை அகற்றி யானைகள் சென்று வருவதற்கான வழியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : சுருண்டு விழுந்த நாய் - உயிர் காக்கும் சிகிச்சை அளித்த நபர்

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் ரயில்வே துறையின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தடுப்புச் சுவர் துரிதமாக அகற்றப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும், இதற்காக குரல் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹுவும் பாராட்டுக்கு உரியவர் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இங்கு யானைகள் வந்து செல்வதற்கான வலசை பாதை கிடையாது என்றும், தற்போது வந்த யானை கூட்டம் எதேச்சையாக வந்தவை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், நாடெங்கிலும் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து பல்வேறு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் வனவிலங்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Also Read : ஆன்லைனில் ரூ.1.4 லட்சத்திற்கு ஆர்டர் செய்த ஒன்றரை வயது குழந்தை... 

முன்னதாக, உச்ச நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியது. நீலகிரி மாவட்டத்தில் 27 ரிசார்ட்டுகள் யானைகளின் வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக கூறி, அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

First published:

Tags: Elephant, Elephant routes, Elephant struggles, Indian Railways