மண் குளத்தில் உருண்டு, புரண்டு சேற்றை தெறிக்க விட்ட யானை - வைரலாகும் வீடியோ!

சேற்றில் விளையாடிய யானை

ஒரகான் மிருகக்காட்சி சாலையானது 2016-ல் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்தது.

  • Share this:
    விலங்குகளின் வீடியோக்கள் எப்போதுமே இன்டர்நெட்டில் பிரபலமாக உள்ளன. அதிலும் சோஷியல் மீடியாக்களில் யானைகள் வேடிக்கையாக விளையாடுவது போல ஷேர் செய்யப்படும் வீடியோக்கள் பெரும்பாலும் தவறாமல் நெட்டிசன்களை ஈர்க்கின்றன.

    பிரமாண்ட உருவத்தை கொண்ட யானைகள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள் அடங்கிய வீடியோ கிளிப்புகளை மக்கள் அதிகம் பார்க்க விரும்புகிறார்கள். அந்த வகையில் அளவில் மிக பெரிய விலங்கான யானை சேற்றில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணயத்தில் வைரலாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பார்க், போர்ட்லேண்ட் பகுதியில் அமைந்து இருக்கிறது ஒரகன் உயிரியல் பூங்கா (Oregon zoo). இந்த ஜு போர்ட்லேண்ட் நகரத்தின் தென்மேற்கிலிருந்து சுமார் 2 மைல் (3.2 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த1888-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது மிசிசிப்பி (Mississippi) ஆற்றின் மேற்கே உள்ள மிக பழமையான மிருகக்காட்சி சாலையாகும். 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலையானது பிராந்திய மெட்ரோ அரசுக்கு சொந்தமானது. இங்கு 230-க்கும் மேற்பட்ட உயிரினங்களின் 1,800 க்கும் மேற்பட்ட விலங்குகள் இருக்கின்றன. ஒரகான் மிருகக்காட்சி சாலையானது 2016-ல் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்தது. புகழ்பெற்ற இந்த Oregon zoo தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளது.

    இந்த வீடியோவில் ஒரு யானை வேடிக்கையாக விளையாடும் காட்சிகள் காணப்படுகிறது. வீடியோவில் இருக்கும் ஜம்போ சைஸ் யானை ஒரு தண்ணீருடன் மண் கலந்த சிறிய சேற்று குளத்தில் உருண்டு பிரண்டு ஜாலியாக விளையாடுகிறது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை தற்போது வரை சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த வீடியோவில் காணப்படும் யானை மிகவும் ஜாலியான மைண்ட் செட்டில் காணப்படுகிறது.

    Also read: கொடூரமாக 80 பேரை வேட்டையாடிய 'ஒசாமா பின்லேடன்' முதலை..!

    சேற்று குளியலில் ஈடுபட்டு கொண்டே யானை செய்யும் சேட்டைகள் நமக்கு சிரிப்பை வர வைக்கிறது. மேலும் அவ்வளவு பெரிய உருவம் சேற்றில் புரண்டு உற்சாகமாக விளையாடும் காட்சியானது நம்மையும் உற்சாகப்படுத்துகிறது. "Spa day" என்ற கேப்ஷனுடன் Oregon zoo ஷேர் செய்துள்ள இந்த வீடியோ நெட்டிசன்களை மிகவும் கவர்ந்து வருகிறது. 1.10 நிமிடங்கள் அடங்கிய வீடியோ கிளிப்பானது அந்த யானை சேற்றில் விளையாடும் போது, சேற்று நீரை கால்களால் தெறிக்க செய்து ‘ஸ்பா தினத்தை' அனுபவிக்கும் மகிழ்ச்சியின் தூய தருணங்களை நமக்கு காட்டுகிறது.



    வீடியோவின் துவக்கத்தில் முதலில் யானை மண் குளத்தில் அமைதியாக படுத்து கிடப்பதை காணலாம். இதற்குப் பிறகு திடீரென உற்சாகமாக எழும் யானை அதன் கால்களை மண் குளத்தில் அடிப்பதன் மூலம் சேற்றை தெறிக்க விடுகிறது. பின்னர் சில வினாடிகள் சேற்றில் படுத்து கொண்டு அதன் முழு உடலையும் சேற்றில் ஊறவைக்கிறது. யானை விளையாடுவதை ஷூட் செய்த கேமரா மேனும் நிச்சயம் சேற்றில் குளித்திருப்பார். கேமரா லென்ஸில் தெறித்த சேறு காரணமாக வீடியோ மங்கலாகிறது. இதன் பின்னர் வீடியோ மீண்டும் தொடர்கிறது. யானையின் வேடிக்கை தொடர்கிறது.
    Published by:Esakki Raja
    First published: