ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மெட்ரோ ரயிலில் ‘க்யூட்’ செல்ஃபி.. வைரலாகும் வயதான தம்பதியின் ரியாக்‌ஷன்ஸ்

மெட்ரோ ரயிலில் ‘க்யூட்’ செல்ஃபி.. வைரலாகும் வயதான தம்பதியின் ரியாக்‌ஷன்ஸ்

வயதான தம்பதி

வயதான தம்பதி

Viral | இந்த தம்பதியர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது கமெண்டில், “வீடியோவில் உள்ள தம்பதியர் சார்பாகவும், என் சார்பாகவும் இதை படம் பிடித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இளமைப் பருவத்தில் காதல் நிரம்ப செல்ஃபி எடுத்துக் கொள்வது ஆச்சரியமான விஷயமா என்ன? நாம் தினசரி வெளியிடங்களுக்குச் செல்லும்போது இதுபோல எத்தனை நிகழ்வுகளை பார்த்து வருகிறோம். ஆனால், வயதான தம்பதியர் மத்தியில் இதே அளவுக்கான காதல் இருக்குமானால், நிச்சயமாக அது பாராட்டத் தகுந்த விஷயம் தான்.

அதிலும் செல்ஃபி சரியாக அமைய வேண்டும் என்று இவர்கள் காத்திருந்து, காத்திருந்து படம் பிடிக்கும் அழகு இருக்கிறதே! அதுதான் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. நீண்ட நேரம் காத்திருந்து, இறுதியாக க்யூட்டான செல்ஃபி எடுத்துவிட்டனர். கொல்கத்தா மெட்ரோ ரயிலில் நடந்த இந்த நிகழ்வை, கல்பாக் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான இந்த வீடியோ தொடர்ந்து வைரல் ஆகி வருகிறது. இது வரையிலும் 4 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அத்துடன் 7 லட்சம் பேர் வீடியோவை லைக் செய்துள்ளனர். எண்ணற்ற பார்வையாளர்கள் ஹார்டின் எமோஜியை பதிவிட்டுள்ளனர்.

இருவரும் மருத்துவர்கள்

வீடியோவுக்கு கீழே இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் பதிவிட்டுள்ள கமெண்டில், “இருவருமே மருத்துவர்கள். இந்தப் பெண் எனது பள்ளி தோழி. எனக்கு மிக, மிக நெருக்கம். நாங்கள் 40 ஆண்டுகளாக நட்புடன் இருந்து வருகிறோம். இந்த அழகிய தருணத்தை படம்பிடித்ததற்கு நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார். பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக உள்ளனர் என்று மற்றொருவர் கூறியுள்ளார்.


சென்னையை சேர்ந்தவர்கள்

இந்த தம்பதியர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவரது கமெண்டில், “வீடியோவில் உள்ள தம்பதியர் சார்பாகவும், என் சார்பாகவும் இதை படம் பிடித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read : ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த மாப்பிள்ளை... கடைசியில் நேர்ந்த துயரம்

இவர்கள் சென்னையை சேர்ந்த தம்பதியர். ஆராய்ச்சியாளராகவும், மருத்துவராகவும் உள்ளனர். தற்போது கொல்கத்தா சென்றுள்ளனர். கொல்கத்தாவில் எங்கள் குடும்பத்தை பார்க்கத்தான் அவர்கள் மெட்ரோ ரயிலில் வந்தனர். நாங்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறோம்.

உணர்ச்சி மிகுந்த இந்த பயணத்தையும், தருணத்தையும் ஃபோட்டோகிராஃபர் அழகாக படம்பிடித்துள்ளார். அவருக்கு கலை ரீதியாக பெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Also Read : மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்.. கணவரின் செயலுக்கு குவியும் பாராட்டு - வைரல் வீடியோ

டிரெண்ட் ஆகும் வயதான தம்பதியர்களின் காதல்

கர்நாடக மாநிலத்தில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் கடந்த மாதம் படம்பிடிக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இதேபோல வைரல் ஆனது. அந்த வீடியோவில் பேருந்துக்காக காத்திருக்கும் வயதான தம்பதியர் படம் பிடிக்கப்பட்டிருந்தனர். மனைவி சோர்வாக உணர்ந்த நிலையில், தரையில் அமர்ந்திருக்கும் கணவனின் மடியில் படுத்து உறங்க தொடங்கினார். அப்போது அந்த கணவன் ஆறுதலாக தலையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த அழகான காட்சி இணையத்தில் வைரல் ஆனது.

First published:

Tags: Tamil News, Trending, Viral Video