ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விநாயகர் சிலை முன்பு கும்பிடு போட்ட நாயின் வைரல் வீடியோ!

விநாயகர் சிலை முன்பு கும்பிடு போட்ட நாயின் வைரல் வீடியோ!

நாய்

நாய்

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு புதிய வீடியோ, கோவிலுக்கு வெளியே உள்ள விநாயகர் சிலைக்கு முன்னால் ஒரு நாய்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செல்ல பிராணிகள் என்றதும் பலரின் நினைவுக்கு வருவது நாய் தான். நாய்களை அதிக பேருக்கு பிடிப்பதற்கு முக்கிய காரணம் அவை நன்றியுடன் இருக்க கூடிய குணம் தான். அதனாலேயே, நாய்கள் இந்த உலகின் மிகவும் அபிமானமான மற்றும் விசுவாசமான செல்லப்பிராணிகளில் ஒன்று என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அதே போன்று, நீங்கள் சோர்வாக இருக்கும்போதும் உங்களை உற்சாகமூட்ட வேண்டும் என்கிற எண்ணமும் நாய்களுக்கு உண்டு. உங்கள் இதயத்தை வெல்வதற்கும், உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் நாய்கள் எதையும் செய்வார்கள்.

  அதனால்தான், நாய்களை பலரும் தங்கள் சொந்த குழந்தைகளைப் போலவே வளர்த்து வருகிறார்கள். நாய்கள் பல வீடுகளில் ஒரு முக்கிய நபராகவும் இருப்பது இதனால் தான். பெரியவர்கள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு நல்ல மதிப்புகளையும் பழக்கவழக்கங்களையும் கற்பிப்பது போல, பல தம்பதிகள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கும் அதையே கற்று கொடுக்கிறார்கள். வீட்டில் கழிப்பறை சுகாதாரம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை நாய்களுக்கு கற்பிக்கிறார்கள்.

  பொதுவாக மனிதர்களுடன் நாம் செய்யும் செயல்களை நாய்கள் அப்படியே செய்ய கூடிய பல வைரல் வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை இணையத்தில் ஆயிரக்கணக்கில் கொட்டி கிடக்கின்றன.
   
  View this post on Instagram

   

  A post shared by Pure thrift (@thrifts_grace)  கடந்த ஆண்டு கூட, ஒரு இந்திய பெண் தனது நாய்க்குட்டிகளுக்கு பிரார்த்தனை செய்ய கற்றுக்கொடுக்கும் வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் கூப்பிய கைகளுடன், அவர் ஒரு பிரார்த்தனையை செய்து கொண்டிருக்கும் போது நாய்களும் அவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தது. மேலும், அந்த செல்லப் பிராணிகள் நல்ல குழந்தைகளைப் போல நடந்துகொண்டும், அந்தப் பெண் பிரார்த்தனையை முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தன. இது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்த்தியது.

  இதை வைத்து மட்டும் ஆச்சரியப்பட வேண்டாம். இது போன்று பல விதைகளை நாய்கள் இன்னும் செய்ய முடியும். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு புதிய வீடியோ, கோவிலுக்கு வெளியே உள்ள விநாயகர் சிலைக்கு முன்னால் ஒரு நாய் கும்பிடுவதாக உள்ளது. லாப்ரடோர் வகையை சேர்ந்த நாய் ஒன்று அதன் தலையைத் தாழ்த்தி, அதன் முகத்தின் அடிப்பகுதியால் தரையைத் தொட்டு, பிள்ளையார் சிலைக்கு மரியாதை செலுத்தும்படியாக அமைந்தது. இந்த வீடியோவை பார்க்கும் யாராக இருந்தாலும் ஒரு நொடி அசந்து போய்விடுவார்கள்.

  புதிய SMS விதிகளை அறிமுகம் - டெலிகாம் நிறுவனங்களுக்கு 15 நாட்கள் காலக்கெடு!

  புனேவில் உள்ள கணபதி கோவிலில் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாயுடன் சென்றவரின் பெயர் விஷால் என்றும் இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவை பகிரப்பட்டதிலிருந்து, சுமார் 2.55 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், பலர் இந்த வீடியோவிற்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலரும் இது தெய்வீக வழிபாடு என்றும், ஜெய் கணேஷா என்றும், நாயின் பிரார்த்தனை பலிக்கட்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக நாய் பிரியர்களின் ஆசீர்வாதத்தையும் அன்பையும் இந்த வீடியோ பெற்றுள்ளது என்றே இந்த கமெண்ட்கள் மூலம் தெரிகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending, Viral, Viral News