முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கடவுளைவிட சிறந்த ஓவியர் இருக்கமுடியுமா..! பஞ்சோந்தியின் வர்ணத்தை கண்டு சிலாகித்த அதிகாரி - வைரலாகும் வீடியோ

கடவுளைவிட சிறந்த ஓவியர் இருக்கமுடியுமா..! பஞ்சோந்தியின் வர்ணத்தை கண்டு சிலாகித்த அதிகாரி - வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | IFS அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்த பச்சோந்தி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடவுளின் படைப்பு அலாதியானது என அனைவரும் சொல்வதுண்டு. சிந்தித்தோமேயானால் அது உண்மை தான். மருத்துவம்,விஞ்ஞானம்,தொழில்நுட்பம் என மனிதன் எவ்வளவு வளர்ந்தாலும் கூட இன்னும் இயற்கை நம்மை வியக்க வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. செயற்கையை இயற்கை என்றும் வீழ்த்த முடிவதில்லை என்பது போன்றுக்கூட தோன்றலாம்.

இன்றைய டிஜிட்டல் உலகில் காண்பதற்கு அரிய நாம் இதுவரை கண்டிராத பல வித்தியாசமான விலங்குகள் பறவைகள் பற்றிய புகைப்படங்கள் வீடியோக்களை நம்மால் காண முடிகிறது. அதற்கு ஏற்றார்போல் பல வினோத வீடியோக்களும் பரவி வருகின்றன. அந்த வகையில் பலவர்ண பச்சோந்தி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பலவர்ண பச்சோந்தி ஒரு நபரின் கையில் அமர்ந்திருக்கும் வீடியோ தான் அது. சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என பல வண்ணங்கள் அந்த ஒரு பச்சோந்தியின் உடலில் காணப்படுகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் IFS அதிகாரி சுசந்தா நந்தா பகிர்ந்துள்ளார். "கடவுளை விட சிறந்த ஓவியர் யார் இருக்க முடியும்" என்று அந்த வீடியோவிற்கு IFS அதிகாரி தலைப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது யார் எடுத்தார்கள் என்ற எந்த விவரமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அந்த பச்சோந்தி காண்பதற்கே அவ்வளவு பிரம்மிப்பூட்டும் விதமாக இருக்கிறது. ஒரு ஓவியன் தன்னிடம் இருக்கும் நிறங்களை எல்லாம் சேர்த்து வரைந்தால் கூட இவ்வளவு தெளிவாக வரைய இயலுமா என தெரியவில்லை. அந்த அளவு அந்த வீடியோவில் உள்ள பச்சோந்தியின் உடம்பில் உள்ள வண்ணங்கள் நுணுக்கமாக உள்ளன.

சமீபத்திய ஆராய்ச்சியின் படி, பச்சோந்திகள் தங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப நிறத்தை மாற்றுகின்றன என்று கூறப்படுகிறது. கோபம், ஆக்ரோஷம், ஒருவருக்கொருவர் பேசுவதற்கும், மற்ற பச்சோந்திகளுக்கு தங்கள் மனநிலையைக் காட்டுவதற்கும் பச்சோந்திகள் தங்கள் நிறத்தை மாற்றுகின்றன. பெண் பச்சோந்திகள் கருவுற்றிருக்கும் போது இனச்சேர்க்கை செய்யாது என்பதைக் குறிக்கும் வண்ணம் தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன, அதே சமயம் ஆண்கள் தங்கள் மனநிலையைப் பொறுத்து சிவப்பு, பச்சை அல்லது நீலம் என நிறங்களை மாற்றிக்கொள்கிறதாம்.

சுசந்தா நந்தா பகிர்ந்த இந்த வீடியோவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றன. அதில் ஒருவர் "இயற்கையின் அற்புதமான வண்ணங்கள்!, எனவும் மற்றொருவர்" ஆஹா.... நம்பமுடியாதது” எனவும் கமெண்ட் செய்துள்ளார். இதை பதிவிடும் நேரத்திற்குள்ளரே இந்த வீடியோ  1 லட்சம் பார்வையாளர்களை கடந்து விட்டது.

First published:

Tags: Trending, Viral