தூக்கக் கலக்கம் அவ்வபோது சில இடங்களில் தர்ம சங்கடமான நிலைமையை ஏற்படுத்தி விடும். ஒரு சிலருக்கு தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கத்துக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், வாழ்வின் முக்கியமான தருணங்களில் யாருமே தூங்க மாட்டார்கள். அதையெல்லாம் பொய் என்று நிரூபிக்கும் விதமாக, அழகான மணப்பெண், மணமேடையிலேயே தூங்கி விழும் காட்சி வீடியோ பதிவாக்கப்பட்டு, இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
திருமணம் அனைவரின் வாழ்விலும் மிக மிக முக்கியமான தருணம். பல்வேறு சடங்குகள் சம்பிரதாயங்கள் இருந்தாலும், மணமகன் மற்றும் மணமகள் இருவருமே திருமணமும் சடங்குகளும் முடியும் வரை கலகலப்பாகவே இருப்பார்கள். அது மட்டுமின்றி, வாழ்வின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான தருணத்தின் புகைப்படங்கள் மற்றும்
வீடியோக்களுக்காகவே, அழகாக, நேர்த்தியாக அலங்கரித்து, பிரத்யேகமான மேக்கப் போட்டுக்கொள்வதும் வழக்கம். மணமகள் முகூர்த்த ஆடை, மேக்கப் மற்றும் ஆபரணங்கள் என்றாலே ஸ்பெஷல் தான். பார்த்து பார்த்து தேர்வு செய்து, பதுமை போல அலங்கரித்துக் கொண்டு மணமேடையில் அமர்ந்திருக்கும் போது தூக்கம் வருமா அல்லது தூங்கி விழுவார்களா?
திருமணங்கள் எவ்வளவு முக்கியமானவையோ, அதே அளவுக்கு வேடிக்கையானவை. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பல சம்பவங்களும் தருணங்களும் ஒவ்வொரு திருமணத்திலும் நடக்கும். அதே போன்ற ஒரு சம்பவம் தான் சமீபத்தில் நடந்துள்ளது. பக்கத்தில்
மணமகன் இருக்கும் போது, திருமணச் சடங்குகள் நடைபெற்றிருக்கும் போதே மணமகள் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறார்.
Also Read : குடியரசு தின வாழ்த்து கூறிய கிலிபால்... - இன்றைய ட்ரெண்டிங் வீடியோ
மணமகன் ஏதோ சடங்கிற்காக நின்று கொண்டிருக்கையில், மணமகள் இருக்கையில் சுற்றி இருப்பது பற்றி எந்த கவலையும் இன்றி, மணமகள் அமர்ந்தபடியே தூங்குகிறார். அவர் தூங்குவதை ஸூம் செய்து வீடியோவாக பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்க்கும் போது, வகுப்பில் முக்கியமான பாடம் நடக்கையில் தூங்கி விழும் போது, பக்கத்தில் இருக்கும் தோழி / தோழன் எழுப்பி விடுவது தான் நினைவில் வருகிறது.
என்ன நடந்தாலும் சரி, தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணமகளை டாக் செய்யுங்கள் என்ற கேப்ஷனோடு பகிரப்பட்ட வீடியோ பதிவின் இணைப்பு இங்கே.
இந்த ஆண்டு இது தான் அதிகம் ரியாக்ட் மற்றும் கமெண்ட் செய்யப்பட்ட வீடியோவாக இருக்கக்கூடும் வகையில் இது வரை 60,000க்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்று, எக்கச்சக்கமான சிரிக்கும் ஸ்மைலிகளைப் பெற்று வருகிறது.
Also Read : உயிர் பயமா எனக்கா? வெள்ளை குதிரையின் துணிகர செயல் - நெகிழவைக்கும் வீடியோ
இதே போல, சில வாரங்களுக்கு முன்பு, திருமண சடங்குகள் எல்லாம் நடைபெற்று மணமேடையில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் கொஞ்சம் ரிலாக்சாக இருக்கையில், இருவருமே தூக்கம் தாங்காமல் கொட்டாவி விட்டபோது எடுத்த புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகப் பரவியது. இந்தப் புகைப்படத்தை வெளியிட்ட புகைப்பட கலைஞருக்கு நிச்சயமாக பணம் கிடைக்காது என்றெல்லாம் நெட்டிசங்கள் கமெண்ட் செய்திருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.