• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • திருமண அலங்காரத்தில் புஷ்-அப் எடுத்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ!

திருமண அலங்காரத்தில் புஷ்-அப் எடுத்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ!

லெஹெங்கா அணிந்தபடி புஸ்-அப்ஸ்

லெஹெங்கா அணிந்தபடி புஸ்-அப்ஸ்

சமீபத்தில் மணமகள் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருவதைக் காணலாம்.

  • Share this:
உடற்பயிற்சி செய்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் சில உடற்பயிற்சி ஆர்வலர்கள் தினமும் பயிற்சி செய்து வருவதால் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். இதன் காரணமாக அவர்களால் ஒரு நாள் கூட உடற்பயிற்சியை செய்யாமல் இருக்க முடியாது. அவர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் உடற்தகுதியை பராமரிக்கும் விஷயத்தில் சமரசம் செய்யவே மாட்டார்கள். மேலும் இவர்கள் கடுமையான ஒழுக்கத்தை பின்பற்றுபவர்களாக இருப்பர்.

அதனால், தினமும் தங்களது உடற்பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்கி விடுவர். இருப்பினும், சில ஃபிட்னஸ் ஆர்வலர்கள் மற்றவர்களை விட ஒருபடி மேலே செல்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் மணமகள் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருவதைக் காணலாம்.

பொதுவாக, ஒரு கனமான திருமண உடையில் மணமகளுக்கு நகர்வது என்பதே கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் வீடியோவில் வரும் மணப்பெண் கனமான லெஹெங்கா மற்றும் திருமண நகைகளை அணிந்தபடி புஷ்அப் எடுக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் வரும் மணப்பெண்ணின் பெயர் ஆன்னா அரோரா ஆகும். மேலும் இவரே அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



 




View this post on Instagram





 

A post shared by aana arora (@aan4490)






தொழில் ரீதியாக உணவியல் நிபுணராக பணிபுரிந்து வரும் இவர், மாடலிங்கும் செய்து வருகிறார். இவர் அடிக்கடி தனது ப்ரொபைல் பக்கத்தில் பிட்னெஸ் குறித்த வீடியோக்கள் மற்றும் பதிவுகளை பகிர்வதைக் பார்க்கலாம். அந்த வகையில் இவர் வெளியிட்ட சமீபத்திய பதிவு ஒன்றில், சிவப்பு நிற லெஹெங்காவில் புஷ்அப் செய்வதைக் காண முடிந்தது. அதில் அவர் முழுவதுமாக திருமண கோலத்தில் இருக்கிறார். அனைத்து அலங்காரங்களும் முடிந்து அவர் மணமேடைக்கு செல்ல தயாராக இருந்தார்.

Also read... Viral video : திருமண நாளில் 100 கிலோ எடையுள்ள லெஹங்காவை அணிந்த மணப்பெண் -வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ மணப்பெண் திருமண லெஹெங்காவில் போட்டோஷூட் நடத்திய போது எடுக்கப்பட்டது போல தெரிகிறது. மற்ற பெண்களுக்கு முழு அலங்காரத்துடன் அத்தகைய உடையில் நடப்பது கூட கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த பெண் அசால்ட்டாக புஷ்-அப்ஸ் எடுத்து நெட்டிசன்கள் வாயை பிளக்க வைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 5.19 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் லட்சக்கணக்கில் வியூஸ்கள் கிடைத்துள்ளன.



இருப்பினும், மணமகள் இடம்பெறும் இதுபோன்ற வீடியோக்கள் பல இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதற்கு முன்னதாக, தனது திருமண நாளில் 100 கிலோ எடையுள்ள லெஹெங்காவை அணிந்த பாகிஸ்தான் மணப்பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அழகான எம்பிராய்டரியால் அலங்கரிக்கப்பட்ட லெஹெங்கா மிகப் பெரியதாக இருந்தது. அது மணமகனும், மணமகளும் அமர்ந்திருந்த முழு மேடையையும் கிட்டத்தட்ட மூடியிருந்தது. இந்த வீடியோ கடந்த ஆண்டே இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்தாலும், தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: