Home /News /trend /

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்த சாகசம்.! வைரலாகும் பழைய வீடியோ..

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்த சாகசம்.! வைரலாகும் பழைய வீடியோ..

Jagan Mohan Reddy

Jagan Mohan Reddy

Jagan Mohan Reddy | தற்போது 49 வயதாகும் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு இளைஞரை போல் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அந்த மாநில மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

அரசியல்வாதிகள் என்றாலே வேட்டி, சட்டை அல்லது குர்தா பைஜாமா மற்றும் நேரு ஜாக்கெட் அணிந்த ஒரு உருவம் தான் நம் மனதில் தோன்றும். தேர்தல் மற்றும் பிரச்சாரங்களில் மட்டுமே அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் காலம் மாறி வருவதால் அதேகேற்ப அரசியல்வாதிகளும் தங்கள் உடை மற்றும் பழக்கவழங்கங்களில் பல மாறுதல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் முக்கியமான ஒருவராக இருந்து வருபவர் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஆந்திர பிரதேசத்தின் 17-வது மற்றும் தற்போதைய முதலமைச்சராக பணியாற்றி வரும் ஜெகன்மோகன் ரெட்டி, 1972 -ஆம் ஆண்டு டிசம்பர் 21-ல் பிறந்தவர்.

தற்போது 49 வயதாகும் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு இளைஞரை போல் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு அந்த மாநில மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன்மோகன் ரெட்டி 2014 மற்றும் 2019-க்கு இடையில் ஆந்திர பிரதேச சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். மூத்த அரசியல்வாதியான சந்திரபாபு நாயுடுவுக்கே மிக பெரிய டஃப் கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அசத்தியவர்.

இந்நிலையில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் பழைய வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் மீண்டும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் முன்பு ஒருமுறை நியூசிலாந்து சென்று இருந்த போது துளியும் பயமின்றி துணிச்சலுடன் ஜெகன்மோகன் ரெட்டி பங்கீ ஜம்பிங் (bungee jumping) செய்வதை காண முடிகிறது. ysjaganholic என்ற இன்ஸ்டா சேனலில் அப்லோட் செய்யப்பட்டிருக்கும் இந்த வீடியோ அரசியல்வாதியான ஜெகன் மோகன் ரெட்டி துணிச்சலான விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபடுவதை வெளிப்படுத்துகிறது. 
View this post on Instagram

 

A post shared by YS Jagan Fans (@ysjaganholic)


பங்கீ ஜம்பிங் என்பது உயரமான ஒரு இடத்திலிருந்து கயிறுகட்டி கீழே குதிக்கும் விளையாட்டு ஆகும், உடலை இழுபடக்கூடிய ரப்பர் கயிற்றால் பிணைத்தபடி உயரத்தில் இருந்து குதித்து மேலும் கீழும் ஊசலாடும் த்ரிலிங் கேம் இது. நாம் அனைவரும் ஒரு அரசியல்வாதியை கட்சி கொடியின் கலர் கொண்ட உடையை அணிந்து கொண்டு, கத்தி கூச்சலிட்டு, பிரச்சார முழக்கங்களை எழுப்புபவராகவே பார்த்து வந்துள்ள நிலையில் நல்ல ஸ்போர்ட்டிவ்வான மனிதராக அந்த வீடியோவில் ஜெகன்மோகன் ரெட்டி பங்கீ ஜம்பிங் செய்வதை பார்க்க முடிகிறது. வீடியோவின் தொடக்கத்தில் ஆந்திர முதல்வர் ஒரு மேடையில் இருந்து குதிக்கத் தயாராகிறார். அவருடைய கோச் அவருக்கு அருகில் நிற்கிறார். உயரத்திலுருந்து குதிக்கும் முன் கேமராவை நோக்கி கை அசைத்து விட்டு கயிறு தனது கால்களில் பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்த பிறகு கீழே குதிக்கிறார் ஜெகன். குறிப்பிடத்தக்க உயரத்தில் இருந்து கீழே குதித்து சாகசங்களை விரும்பும் அரசியல்வாதியாக பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறார்.

Also Read : ரயில் தண்டவாளங்களை கடக்க முடியாமல் தவித்த யானைகள் - துரிதமாக வழி ஏற்படுத்திக் கொடுத்த ரயில்வேதுறை

மலைகளால் சூழப்பட்ட ஆறு கீழே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பங்கீ ஜம்பிங் செய்து சிறிது நேரம் கயிற்றில் ஊஞ்சலாடிய அவர் பின் ஏற்பாட்டாளர்களால் படகில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டார். இந்த வீடியோ கடந்த 2018-ல் ஜெகன்மோகன் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்கு நியூசிலாந்து சென்ற போது எடுக்கப்பட்டது. அவர் பங்கீ ஜம்ப் செய்த இடம் Kawarau Bungy Centre. இது நியூசிலாந்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக கருதப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Andhra pradesh cm, Jagan mohan reddy, Trending

அடுத்த செய்தி