ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

புகைபிடிக்கும் பறவையா..! இணையத்தை அசர வைக்கும் பறவையின் வைரல் வீடியோ

புகைபிடிக்கும் பறவையா..! இணையத்தை அசர வைக்கும் பறவையின் வைரல் வீடியோ

புகைபிடிக்கும் பறவை

புகைபிடிக்கும் பறவை

ஒரு அற்புதமான வெள்ளைப் பறவை, பச்சை-நீல நிற தலை மற்றும் கழுத்துடன், பல முறை கத்திவிட்டு வாயிலிருந்து புகை மூட்டத்தை வெளியேற்றுவதைக் காட்டியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கட்டிட காடாக நகரங்கள் மாறிய பிறகு, பறவைகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஆனால் காடுகளுக்குள் பத்திரமாக பதுங்கி இருக்கும் ஒரு சில அறிய பறவைகள் கேமராக்களில் பட்டுவிட்டால் அது இணையத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டு தான் போகின்றன.

  நடனமாடும் பறவைகள், சிரிப்பொலி எழுப்பும் பறவைகள், அழுகுரல் பறவைகள் என்று பலவகை பறவைகளை பார்த்திருப்போம். புகை பிடிக்கும் பறவையை பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு பறவை இணையத்தை கலக்கி வருகிறது.

  புகைபிடிக்கும் பறவை என்றால் உண்மையில் புகைபிடிப்பது அல்ல. சில பறவைகள் தன் இனத்திற்குள் ஒலி எழுப்பிக்கொள்ளும் பொது இறுதியில் அதன் அலகில் இருந்து புகை போன்று வெளியே வருகிறது. அதனால் தான் அந்த பறவையை அப்படி குறிப்பிடுகின்றனர்.

  ஊஞ்சல் ஆடபோறேன்.. பூங்காவுக்குள் நுழைந்து ஊஞ்சல் ஆடிய யானை! க்யூட் வீடியோ!

  ஆனந்த் ரூபனகுடியின் தனது ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், ஒரு அற்புதமான வெள்ளைப் பறவை, பச்சை-நீல நிற தலை மற்றும் கழுத்துடன், பல முறை கத்திவிட்டு வாயிலிருந்து புகை மூட்டத்தை வெளியேற்றுவதைக் காட்டியது.

  இணைய பயனர்கள் இந்த பறவையை வெற்று-தொண்டை பெல்பேர்ட்( Bare-throated bellbird) என்று அடையாளம் கண்டுள்ளனர். இது பிரதானமாக பிரேசிலில் காணப்படுகிறது. இதன் சத்தம் இறுதியில் மணி அடிப்பது போல் இருப்பதால் இந்த பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

  குளிர்ந்த காலநிலையில் பறவையின் வாயிலிருந்து சூடான காற்று வெளியேறுகிறது. அதனால் தான் புகைபிடிப்பதை போல தெரிகிறது. புகை வெளியிடுவது அந்த பறவையின் இயல்பு அல்ல காட்சிப்படுத்தும் சூழலில் நடந்தது என்று ஒரு பறவைகள் ஆர்வலர் இணையத்தில் விளக்கம் தந்துள்ளார்.

  இதுபோன்று, கடந்த மாதம், குழந்தைகள் விளையாடும் சத்தத்தை பிரதிபலிக்கும் ஒரு போவர்பேர்ட் (Bowerbird) வீடியோ இணையத்தில் பரவியது. 56 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு போவர்பேர்ட் எவ்வாறு வெவ்வேறு இனங்கள் அல்லது வேறு இடங்களில் கேட்ட ஒலிகளைப் பிரதிபலிக்கும் என்பதைக் காட்டுகிறது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Birds, Chennai, Viral Video