• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Viral Video : இந்த நொடியை மகிழ்வாய் ரசித்து வாழும் பாண்டா .... இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ

Viral Video : இந்த நொடியை மகிழ்வாய் ரசித்து வாழும் பாண்டா .... இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ

இந்த நொடியை மகிழ்வாய் ரசித்து வாழும் பாண்டா

இந்த நொடியை மகிழ்வாய் ரசித்து வாழும் பாண்டா

Viral video : பலரும் பாண்டாவின் கியூட்டான செயல் குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

  • Share this:
    பாண்டா ஒன்று இந்த நொடியை இந்த நிமிடத்தை ரசித்து வாழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது . இந்திய வனத்துறை அதிகாரியான ( Susanta Nanda IFS ) தனது ட்விட்டர் பக்கத்தில் ( @susantananda ) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குட்டி பாண்டா ஒன்று நீர் நிரம்பிய சிறிய குட்டையில் ஆனந்தமாக துள்ளி கொண்டு விளையாடி மகிழ்கின்றது.

    இந்த வீடியோவை வெளியிட்டுள்ள வனத்துறை அதிகாரி அதன் மேலே தலைப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த தலைப்பில் இந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். ஒவ்வொரு கணமும் நமக்குத் தேவையானதுதான் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகின்றது. பலரும் பாண்டாவின் கியூட்டான செயல் குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.





    இதே போன்று குரங்கு ஒன்று கியூட்டாக விளையாடும் வீடியோவை அண்மையில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவும் ட்விட்டரில் அதிக ரீட்வீட் மற்றும் லைக்ஸ்களை வாங்கிக் குவித்தது. அந்த வீடியோவில் பெரிய குரங்கு ஒன்று குட்டி குரங்கினை விளையாட அழைத்து அதனை கொஞ்சுகின்றது.

    அன்பு என்பது நீங்கள் கூறுவதில் இல்லை நீங்கள் செய்வதில் உள்ளது என இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: