Home /News /trend /

'நாங்க தோஸ்துங்க' கெத்தாக ஒரு குடைக்குள் செல்லும் 6 சிறுவர்கள் - வைரலாகும் க்யூட் வீடியோ.!

'நாங்க தோஸ்துங்க' கெத்தாக ஒரு குடைக்குள் செல்லும் 6 சிறுவர்கள் - வைரலாகும் க்யூட் வீடியோ.!

Image : Twitter

Image : Twitter

Viral Video | மழையில் நனையாமல் செல்ல வேண்டும் என்று ஒரு குடைக்குள் 6 சிறுவர்கள் செல்ல முயலும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நாள்களிலேயே இந்த வீடியோவை இதுவரை 1.3 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

    குழந்தைகள் சேட்டைகள் செய்தாலும், கொஞ்சும் மழலையில் பேசினாலும், சிரித்தாலும், அழுதாலும், கோபம் அடைந்தாலும் எப்போதும் அழகாகத்தான் நமக்குத் தெரிவார்கள். வீட்டில் மட்டுமில்லை குழந்தைகள் பொது இடங்களுக்குச் சென்றாலும் பலரின் மனதைக்கொள்ளைக் கொள்ளும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இவர்கள் என்ன செய்தாலும் இணையத்தை டிரெண்டாக்கி வரும் சூழல் தான் தற்போது நிலவுகிறது.

    குறிப்பாக “எனக்கு சங்கம் முக்கியம் இல்ல சோறு தான் முக்கியம் என சொல்லும் நெல்லை குழந்தை தொடங்கி அம்மா அடிச்சா அப்பாகிட்ட சொல்லிருவேன் என்று அழுதுக்கொண்டே பேசும் குழந்தைகள் என ஒவ்வொன்றும் அந்தெந்தக் காலக்கட்டத்தில் இணையத்தை வைரலாக்கியது. இதோடு டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸ் என குழந்தைகள் மேற்கொள்ளும் குறும்புத்தனமான வீடியோக்களும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதே போன்று நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் உள்ள குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட அனைவரையும் ரசிக்க வைத்து சோஷியல் மீடியாவைக் கலக்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அதனை பார்க்கும் அனைத்து பார்வையாளர்களையும் சிறு வயது நியாபகத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அப்படி என்ன தான்? அந்த வீடியோவில் இருந்தது தெரியுமா?



    பள்ளியை முடித்துவிட்டு மழைச்சாரலுக்கு இடையே குழந்தைகள் கையில் சிலேட்டுடன் சாலையில் நடந்து செல்கின்றனர். அங்கு 6 குழந்தைகள் மகிழ்வுடன் நடந்து சென்றுக்கொண்ட நேரத்தில், மழையில் நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் வைத்திருந்த ஒரு குடைக்குள் புகுந்து நனையாமல் செல்ல முயற்சித்தனர். இது சில நிமிட வீடியோக்கள் தான்.. ஆனால் இந்த வீடியோ இணையத்தில் பதிவான சில நாள்களிலே இதுவரை 1.3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

    Also Read : சுற்றி வளைத்து தொல்லை கொடுத்த 6 ஆண்களை ‘அடி பொளந்தெடுத்த’ சிங்கப்பெண்... வைரல் வீடியோ! 

    மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு வேடிக்கையானக் கருத்துகளையும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக “இந்த தருணத்தை நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அனுபவித்துள்ளோம், இந்த வீடியோ எங்களின் சிறு வயது நினைவுகளை நினைவுப்படுத்துகிறது என்று கமெண்ட்ஸ்களைத் தெரிவித்ததோடு மழையில் நனைந்தப்படி சேற்றில் விளையாடும் சில வீடியோக்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். நாங்க தோஸ்துங்க என தெரிவிக்கும் விதமாக, குழந்தைகள் மேற்கொள்ளும் இது போன்ற குறும்புத்தனமான வீடியோக்களை எப்போதும் ரசித்து கொண்டே இருக்கலாம் என்பது போன்ற கருத்துக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Friendship, Trending, Viral Video

    அடுத்த செய்தி