செல்போன் இல்லையென்றால் வாழ்க்கையில் பிடித்த ஒன்றை இழந்துவிட்டோம் என்ற தவிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆம் சமீப காலங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகிவிட்டார்கள். காலையில் எழுந்ததும் ஸ்மார்ட்போன்களின் முகத்தில் முழிக்கவில்லை என்றால் நாள் நன்றாக செல்லாது என நிலையில் தான் இன்றைக்கு உள்ளோம். சாப்பிடும் போது, நடந்து செல்லும் போது, வாகனம் ஓட்டும் போது என அனைத்து வேலைகளைச் செய்தாலும் செல்போனை மட்டும் பயன்படுத்தாமல் இருந்ததில்லை. இதனால் தான் பல சாலை விபத்துக்கள் அரங்கேறுகிறது.
இந்த சூழலில் தான் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக், ரீல்ஸ் வீடியோக்கள் போடும் பழக்கம் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பணிகளில் ஒன்றாகிவிட்டது. முன்பு கூறியது போல அனைத்து வேலைகளைச் செய்யும் போது வீடியோக்களை எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுகின்றனர். இதில் சில வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாவதோடு நெட்டிசன்களிடம் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது. அப்படி என்ன இருந்தது தெரியுமா?
Read More : ஒரே கார்ட்டூன்.. போனை தூரம் வைத்த மஹிந்திரா.. மனம் நொந்து பதிவிட்ட தொழிலதிபர்!
பெண் ஒருவர், தன்னை மறந்து மொபைலில் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அதுவும் ரயில் தண்டவாளத்தில் படுத்துப் பேசுவது தான் இதில் ஹைலைட். அப்போது அவ்வழியாக வேகமாக ரயில் அவரைக் கடந்து செல்கிறது. சில நொடிகளில் ரயில் கடந்து சென்றதும், மீண்டும் எழுந்து சர்வ சாதாரணமாக ஒன்றுமே நடக்காது போன்று எழுந்து சென்றுவிடுகிறார். இந்த வீடியோ தான் தற்போது டிவிட்டரில் வைரலாகிறது. கடந்த நவம்பர் 29 ஆம் தேதி இந்த வீடியோ வெளியான நிலையில் தற்போது வரை 7 லட்சத்திற்கும் அதிகமாக பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
हे भगवान! फ़ोन पर बात करते रहो चाहे ऊपर से ट्रेन गुजर जाए!
🚨 सावधान : कृपया इसे कोई भी दोहराने की कोशिश न करें। ये जानलेवा साबित हो सकता है। 🚨
pic.twitter.com/nfVSMaTQUZ
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) November 28, 2022
இதுகுறித்து டிவிட்டரில் கருத்துக்களைப் பகிர்ந்த நெட்டிசன்கள், “ இதெல்லாம் உனக்கு தேவையா? போனில் பேசுவது தவறில்லை. ஆனால் அதற்கென்று இப்படி பேசலாமா? இந்த பெண்ணுக்கு மன ரீதியாக பிரச்சனைகள் இருக்கும் போல.. உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.இதோடு இந்த உலகத்தில் அதிர்ஷ்டசாலிகள் தான் பயணிக்க முடியும் என்றும், இதற்கு இந்த பெண் சிறந்த உதாரணம், இனி தண்டவாளத்தில் படுத்திட்டு, பேச வேண்டாம், ரயில் வரும் போது கொஞ்சம் எழுந்திருச்சு பேசுங்க என கலாய்த்தும் டிவிட்டரில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral Video, Viral Videos