”சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு…” பாட்டியின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய பேத்தி! - வைரல் வீடியோ

ஒரு பாட்டி மற்றும் அவரது பேத்தியின் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோ உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தர வாய்ப்புகள் உள்ளது.

ஒரு பாட்டி மற்றும் அவரது பேத்தியின் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோ உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தர வாய்ப்புகள் உள்ளது.

  • Share this:
பாட்டி ஒருவர் தனது பேத்தியிடம் பரிசு பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் தற்போது எண்ணற்ற வீடியோக்கள் நாள்தோறும் வைரலாகி வருகிறது. குழந்தைகளின் குறும்புத்தனமான வீடியோக்கள், யானை, நாய் போன்ற விலங்குகளின் வீடியோக்கள், நெகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய வீடியோக்கள் என பலவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்களிடையே ஒரு அழகிய தருணத்தை வெளிப்படுத்தும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ட்விட்டரில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளது.

ஒரு பாட்டி மற்றும் அவரது பேத்தியின் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோ உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தர வாய்ப்புகள் உள்ளது.

மேலும் அந்த வீடியோவில், என்ன நடக்கிறது என்பதை விளக்கும் தலைப்பும் இடம் பிடித்துள்ளது. "தனது வாழ்நாள் முழுவதும் ஒரு பார்பி பொம்மையை பெற விரும்பினேன்" என்ற தலைப்பு உள்ளது. அந்த வீடியோ காட்சியில் " டோனா கார்மோசா என்ற பாட்டிக்கு அவரது பேத்தி சர்ப்ரைஸாக ஒரு அழகான பார்பி பொம்மையை கொடுக்கிறார். அதனை பிரித்து பார்க்கும் பாட்டி ஆச்சரியப்படுகிறார், மேலும் அவரது பேத்தியை கட்டியணைத்து மகிழ்ச்சியுடன் முத்தம் கொடுக்கிறார்.பிரேசிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது பாட்டியிடம் இதுவரை பார்பி பொம்மைகள் இல்லை என்பதையும், அவருக்கு பார்பி என்றால் அதிக விருப்பதையும் உணர்ந்து கொண்ட அந்த பாட்டியின் பேத்தி அவருக்கு தெரியாமல் பார்பி பொம்மையை வாங்கி பரிசாக அளித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாட்டி கண்ணீர் மல்க பேத்திக்கு நன்றி கூறியுள்ளார்.

Also Read | ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால்… கூகுள் சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் கதை!

இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என கூறி வருகின்றனர். இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, 5,900க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் காதல் நிறைந்த கருத்துகளையும் பெற்றுள்ளது. ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையிலிருந்து இதே போன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

"நான் ஒரு சக ஊழியருக்கு டெட்டி பியர் பொம்மையை பரிசாக கொடுத்தேன், இந்த வீடியோ எனக்கு அதனை நினைவூட்டுகிறது. அவள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அவளிடம் டெட்டி பியர் இல்லை ஒரு ட்விட்டர் யூசர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். "எந்த வயதிலும் ஆசைகள் நிறைவேறும்" என்றும், அன்பு எப்போதும் அழகானது என்று மற்றொருவரும் கமெண்ட் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் மற்றொரு யூசர் ஒரு அனைவரிடமும் அன்பாக இருப்பது மட்டுமின்றி, அவர்களது சிறு சிறு கனவுகளை நினைவேற்றுவது அவருக்கு மட்டும்மல்லாமல் நமக்கும் அது மகிழ்ச்சியை தரும் என குறிப்பிட்டுள்ளார்.
Published by:Archana R
First published: