• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • காதலர்களுக்கு மத்தியில் காலை கடனை கழிக்க வந்த நாய் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

காதலர்களுக்கு மத்தியில் காலை கடனை கழிக்க வந்த நாய் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

காதலிக்கு காதலர் தனது காதலை வெளிப்படுத்திய வேலையில் எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே புகுந்து உங்க இஷ்டத்துக்கு நீங்க வீடியோ எடுத்தா அப்புறம் எனக்கு என்ன மரியாதை என்பன போல் வீடியோவில் குறுக்கிட்டுள்ளது

  • Share this:
    திருமணத்திற்காக காதலிக்கு ப்ரொபோஸ் செய்யும் போது குறுக்க இந்த கௌசிக் வந்தா? என்பன போல் நாய் ஒன்று ஒட்டு மொத்த சம்பவத்தையும் ஷிட் செய்துவிட்டு சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    காதலர்கள் பெரும்பாலும் தங்கள் காதல் சொன்ன நாள் , திருமண நாள் என அனைத்தையும் திட்டமிட்டு அழகான முறையில் வடிவமைக்க எண்ணுவர். அப்படியே கனடாவில் உள்ள திருமண தம்பதிகள் இருவரும் திருமண நாளை மறக்காமல் வைத்திருக்க தங்கள் காதலை வெளிப்படுத்தி மோதிரம் மாற்றும் வேலையில் அதனை வீடியோவாக பதிவு செய்து வைக்க எண்ணி உள்ளனர்.

    அதன் படி தனது காதலிக்கு காதலர் தனது காதலை வெளிப்படுத்திய வேலையில் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக நாய் ஒன்று வீடியோவின் உள்ளே குறுக்கே புகுந்து உங்க இஷ்டத்துக்கு நீங்க வீடியோ எடுத்தா அப்புறம் எனக்கு என்ன மரியாதை என்பன போல் வீடியோவில் குறுக்கிட்டுள்ளது. சரி வந்ததும் தான் வந்துச்சு அப்படியே சென்று விடும் என நினைத்தால் அப்படியே தனது காலை கடனை கழித்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



    இதே போன்று சமீபத்தில் திருமணத்தில் மணமக்களை பின்னுக்கு தள்ளி போஸ் கொடுத்த ஹென்றி என்ற நாய் தற்போது வைரலாகி வந்தது. எமிலி என்பவர் சமீபத்தில் நடைபெற்ற தனது திருமண போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்தார்.



    அதில் அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தில், எமிலிக்கு மோதிரம் கொண்டு வருபவராக ‘ஹென்றி’ என்ற நாய் நியமிக்கப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போட்டோகிராபர், வழக்கம் போல புகைப்படம் எடுத்து கொண்டிருக்க, ஹென்றி (நாய்) முன்னாள் வந்து போஸ் கொடுத்ததை போட்டோ எடுத்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by WeRateDogs® (@weratedogs)






    அந்த புகைப்படத்தில் திருமணம் செய்துகொள்ளும் அந்த திருமண ஜோடியின் அழகையே, ஹென்றி கைப்பற்றி கொண்டது. காரணம் ஹென்றி கொடுத்த ரியாக்சன் தான் காரணம்.



    “ஹென்றி நீ அவ்வளவு அழகு, நீ தான் என்னுடைய திருமணத்தில் எங்களை பின்னுக்கு தள்ளிவிட்டாய் என்றும், எப்படி எங்களின் திருமண நிகழ்ச்சியில் அவ்வளவு அழகையும் திருடினாய்’ என்றும் ட்விட்டரில் அதன் உரிமையாளர் ஷேர் செய்து இருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: