இளம்பெண்ணின் அஜாக்கிரதையால் மாட்டிக் கொண்ட நாய்.. காப்பாற்றிய ஹீரோ...! - வைரல் வீடியோ

இளம்பெண்ணின் அஜாக்கிரதையால் மாட்டிக் கொண்ட நாய்.. காப்பாற்றிய ஹீரோ...! - வைரல் வீடியோ
  • Share this:
இளம்பெண் ஒருவரின் அஜாக்கிரதையால் லிஃப்ட்டுக்கு வெளியே கயிறுடன் மாட்டிக்கொண்ட நாயை இளைஞர் பாய்ந்து சென்று காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

டெக்சாஸ் மகாணத்தில் இளம்பெண் ஒருவர் அவரது செல்லப் பிராணியான நாயை வாக்கிங் அழைத்து சென்று திரும்பி உள்ளார். லிஃப்ட்டில் செல்வதற்காக அந்த பெண் காத்திருந்தார்.

சிறிது நேரத்திற்கு பின் லிஃப்ட் வந்ததும் அதிலிருந்து ஒரு இளைஞர் வெளியேற பெண் உள்ளே செல்கிறார். ஆனால் அவர் உடனிருந்த நாய் வெளியேவும், கட்டிய கயிறு உள்ளே இருக்கும் போதே லிஃப்ட் மேலே செல்கிறது.


லிஃப்ட்டை விட்டு வெளியே வந்த இளைஞர் இதை பார்த்ததும் பதறியடித்து ஓடி நாய் கழுத்தில் சிக்கி இருந்து கயிற்றை விடுவித்து காப்பாற்றுகிறார்.இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை சமூகவலைதளத்திலும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை 19 மில்லியனுக்கும் அதிகமானோார் பார்த்து உள்ளனர். நொடிப் பொழுதில் சாமர்த்தியமாக செயல்பட்டு நாயை மீட்ட இளைஞரை பலரும் பாராட்டியுள்ளனர். அதேசமயம் அஜாக்கிரதையாக இருந்த அந்த பெண்ணையும் வசைப்பாடி உள்ளனர்.
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading