முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கேரளாவில் திருவிழாவின் போது கோபமடைந்த கோவில் யானை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

கேரளாவில் திருவிழாவின் போது கோபமடைந்த கோவில் யானை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

கேரளா கோவில்களில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளில் யானைகள் பங்கேற்கின்றன. திருவிழாவின் போது மேளம், தாளம் சத்தங்கள் கேட்கத் தொடங்கியவுடன் திடீரென கோபமடைந்த யானை தன் உடலை அங்கும் இங்கும் அசைக்க ஆரம்பித்தது. இதில் பாகன் சுவாமிநாதன் கீழே விழுந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவில்வாமலை வில்வாத்ரிநாதர் கோவிலில் யானை ஒன்று தன் மீது அமர்ந்து இருந்த பாகனை தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது.

கேரளா கோவில்களில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளில் யானைகள் பங்கேற்கின்றன. கடந்த வியாழன் அன்று வில்வாத்ரிநாதர் கோவிலில் நடந்த திருவிழாவின் போது யானையின் மீது ஏறி அதன் பாகன் அமர்ந்துள்ளார். திருவிழாவின் போது மேளம், தாளம் சத்தங்கள் கேட்கத் தொடங்கியவுடன் திடீரென கோபமடைந்த யானை தன் உடலை அங்கும் இங்கும் அசைக்க ஆரம்பித்தது. இதில் பாகன் சுவாமிநாதன் கீழே விழுந்தார்.

' isDesktop="true" id="570143" youtubeid="jqQ9kzdBGPE" category="trend">

பின்னர் யானை திரும்பி அவரைத் தாக்க முயன்றது, எனினும், சுவாமிநாதன் பாதுகாப்பாக தப்பி ஓடிவிட்டார். கோவிலில் 'கச்சா சீவேலி' சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர் அங்கிருந்த தீபத்தையும் கீழே தள்ளிவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த முயற்சிகளுக்குப் பிறகு யானை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

கடந்த ஆண்டு, யோகா குரு பாபா ராம்தேவ் யோகா செய்யும் போது யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். மதுராவில் அமைந்துள்ள ராமனரதியில் அமைந்துள்ள குருசரணன் ஆசிரமத்திற்கு வந்த பாபா ராம்தேவ் அங்கிருந்த யானை மீது அமர்ந்து யோகா செய்தார்.

மாணவர்களுக்கு யோகா பயிற்சி தருவதாக அவர் யானை மீது ஏறி யோகா செய்தார். சிறிது நேரத்தில், யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இந்த, வீடியோ வைரலானது.

First published:

Tags: Elephant, News On Instagram, Viral Video